மஹாராஜா ஊடக நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தா தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சிரச தொலைக் காட்சி செயற்பட்டதாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.தமது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
சிறிகொத்தா தாக்குதல் சம்பவத்திற்கும் மஹாராஜா ஊடக நிறுவனத்திற்கும் இடை யில் ஏதேனும் தொடர்பு காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment