Translate

Wednesday, 28 December 2011

புலம் பெயர்ந்து வந்த ஈழத்து இளம் இயக்குனரின் அனலாய் ஒரு பகிரங்க கடிதம்..!


புலம் பெயர்ந்து வந்த ஈழத்து இளம் இயக்குனரின் அனலாய் ஒரு பகிரங்க கடிதம்..!


புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே.!
நாம் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவரிடம் அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த வகையில் ஈழத்து சினிமா ஒன்று இருக்கிறதா ? இல்லையா ?
ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு இனத்தின் பிரச்சனையை உலக அரங்கிற்கு சுலபமாக எடுத்துச் செல்லலாம்.
எமக்கு என்று ஒரு சிறத்த அரசாங்கம் இருந்துள்ளது அதில் மக்களுக்கு வேண்டிய அனைத்து துறைகளும் இருத்துள்ளதை இத்த உலகம் நன்கு அறியும்.
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி எடுப்பதற்காக ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தையோ செட்டு போட்டு காட்சி அமைத்து படப்பிடிப்பு செய்வார்கள்.

படப்பிடிப்பு முடித்த பிற்பாடு செட்டை கலைத்து விடுவார்கள்.
அது போல் கலைக்கப்பட்டதா எமது மக்களின் விடுதலை போராட்டம்.
தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதிலும் இயக்குவதிலும் தமிழகம் சிறத்து விளங்கின்றது.
எமக்கும் தமிழ் நாட்டில் ஈழக்கலைஞர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு சில மாபெரும் இயக்குனர்களும், கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் எமது பிரச்னைகளை திரைப்படங்கள் மூலமாக சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது புரியவில்லை, காரணம் சுயநலமாக இருக்கிறார்கள்.!
ஒரு உண்மையான கலைஞன் என்பவன் தான் வாழும் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும்.
அந்த கலைகள் எமது அடுத்த சந்ததிகள் சிறப்பாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.
நாம் எங்கு வாழ்கிறோமோ அந்த நாடுகளின் சட்ட திட்டம்களை பின்பற்றி எமது கருத்துக்களையும், பிரச்னைகளையும் சொல்லலாம் சொல்லமுடியும்.
ஆனால் நாங்கள் அடுத்தவர்கள் படைப்புகளையே நம்பி இருக்கிறோம். சினிமா என்றால் பெரும்பாலானோர் தப்பான தொழில் என்று நினைத்து ஒரு வட்டம் போட்டு வாழ்த்து வருகிறார்கள் இது தவறான கருத்து நல்ல மனிதர்களும் நல்ல படைப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
எனக்கு தெரித்து பல ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் திரைப்படம் தயாரிக்க முன் வந்தார்கள் அனால் சில காரணம்களால் கடைசியில் வேறு ஒருவர் அந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் ஆகி விடுகிறார்.
சில வேளை தயாரிப்பாளராக வந்த குற்றத்திற்காக அடியும் விழுகிறது விழுத்திருக்குது.
தமிழ் நாட்டில் வெளியாகும் சில பிரபலங்களின் ஆடம்பரமான நம்பமுடியாத படங்களின் கதாநாயகர்களுக்கு பால் அபிசேகமும் பீர் அபிடேகமும் செய்கிறோம் அவ்வளவு நல்லவர்கள் நாங்கள்.
ஆனால் அவர்களால் எமக்கு எந்த பலனும் அறவே இல்லை. புலம்பெயர்ந்த நாடுகளிலோ அல்லது தாயகத்திலோ எத்தனை தமிழ் திரையரங்குகள் உள்ளன என்று எண்ணிப்பாருங்கள்.
அந்த திரையரங்குகளில் ஒரு நாளைக்கு எத்தனை தடவைகள் காட்சி திரையிடப்படுகின்றன அந்த காட்சிகளை பார்ப்பதற்கு எமது மக்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் செல்கிறார்கள்.?
அந்த வீணாப்போன திரைப்படங்களை பார்க்க நாம் எத்தனை ஆயிரம் பொன்னான மணித்துளிகளை செலவிடுகிறோம்.
இது நான் சொல்வது ஒரு நாளைக்கு .
நாங்கள் கடினப்பட்டு குளிர்நாட்டுகளிலும், வெப்பநாடுகளிலும் உழைத்த பணம் எப்படி வீனப்போகிறது என்று எண்ணிப்பாருங்கள். ஏதோ ஒரு வகையில் தூக்கத்தை தொலைத்து நாடுநாடாக அழைகிறோம்.
நாம் எடுத்த திரைப்படங்களை சரியான முறையில் வெளியிட தெரியாமலும் எமது திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாமலும் துடிக்கிறோம்.
இதை விடுத்து இப்படி பட்ட பிரபலங்களின் படத்தை பார்ப்பதால் எமக்கு என்ன நடக்க போகிறது, மாறாக அவர்கள் மேலும் மேலும் பல வீடுகளுக்கு சொந்தக்காரகள் ஆகிறார்கள் நாங்கள் ஒரு இடமோ அல்லது ஒரு முகவரியோ இல்லாமல் நாடுநாடக அலையவேண்டியது தான்.
இதிலும் ஒரு சிலர் கையை முறுக்கி மேடைகளில் பேசுவதினாலும், பகலில் வெளியில் உணர்வு இருப்பது போல் நடிப்பதாலும் எதுவும் நடந்து விடப்போவதில்லை இது வெளி உலகத்துக்கு தெரியாது.
ஒரு மேடையில் ஒரு தமிழ் உணர்வாளர் பேசும் போது சொல்கிறார் இலங்கை தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தடுக்காத அமெரிக்க அதிபர் ஒபாமாவை தான் வன்மையாக கண்டிக்கிறாராம்
இது ஒபாமாவிற்கு கேட்காது என்ற துணிவில் பேசுகிறார்.
ஒரு வேளை இது ஒபாமாவிற்கு தெரிந்தால் இவர் நிலையை நினைத்துப் பாருங்கள். இனியும் இப்படி அடுக்கு மொழி பேசுபவர்களை கண்டு ஏமாந்துகொண்டு இருக்காமல் எங்களுக்கான படைப்புகளை நாங்களே உருவாக்கி, அந்த வீரியமான படைப்புக்கள் மூலம் எமது மக்களின் பிரச்னைகளை உலகஅரங்கிற்கு துணிவுடன் எடுத்துச்சொல்ல, மற்ற நாடுகளை போல எமது திரைதுறையிலும் ஒரு நல்ல திருப்பத்தை நாம் எல்லோரும் நினைத்தால் கொண்டு வரலாம்.
நான் தமிழ் நாட்டில் உள்ள திரைப்பட கல்லூரியில் Diploma Film in Technologies என்னும் படிப்பை முடிப்பதற்காக எடுக்கப்பட்ட குறும்படம் தான் மண்ணும் சிவந்தது. இதை போன நவம்பர் 2010 மாவீரர் தினம் அன்று தமிழிழ வெளியீடுபிரிவு மற்றும் தமிழர்குரல் வெளியிட்டு வைத்தது. இதைவிட ஐந்து தமிழ்திரைப்படம்களில் உதவிஇயக்குனராக பணியாற்றி விட்டு இப்போது எனது இரண்டவது படைப்பாக கூட்டாளி என்னும் திரைப்படத்தை தயாரித்து இயக்கயுள்ளேன்.
ஈழப்படம் என்பதால் பல சவால்களையும், அவமானங்களையும் தாண்டி ஒரு நாள் இரவு படத்தின் உச்சக்கட்ட காட்சியை படமாக்கும் சமையத்தின் போது இரண்டு தடவை காவல்துறையால் கைது செய்யப்பட்டேன்.
இவற்றை எல்லாம் தாண்டி கூட்டாளி திரைப்படம் தை திருநாள் அன்று ஒவ்வொரு நாடுகளிலும் வெளியிட முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
கூட்டாளி திரைப்படத்தின் கதையானது….
இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்டது இந்த திரைப்படம்!.
இந்த கதையின் சாராம்சம்.

“ ஒரு சந்நியாசின் இலக்கு
இறைவனை கண்டடைவது.
ஒடும் நதியின் இலக்கு
சமுத்திரத்தை சென்றடைவது.
ஒரு போராளியின் இலக்கு
பூர்வீகத்தை வென்றெடுப்பதே “
வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும்.
சர்வாதிகாரத்தின் ஆயுள் ?
அற்ப ஆயுள் என்பதே அது.
போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது.
இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள்.
அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்து அடக்குமுறையை அப்புறப்படுத்தி மக்களாட்சி மலர்ந்திட செய்திருக்கிறார்கள்.
அதில் சிலர் யுத்தகளத்தில் வீரமரணத்தையும் சந்தித்திருகின்றார்கள். ஆனால் அந்தமாசற்ற தலைவர்கள் இட்டு சென்றபாதையில் பல்லாயிரம் வீரர்கள் தொடர்ந்து இப்போராட்டத்தை கையிலெடுத்து அறவழியோ? ஆயுதவழியோ? விடுதலைப்போரை சிறந்தமுறையில் கையாண்டு அதில் ஈடுஇணையில்லா வெற்றியை மக்களுக்கு பெற்றுத் தந்திருக்கின்றார்கள், இது உலகறிந்த உண்மை. இக்கதையில் வரும் நாயகனும் மேற்கோள் காட்டிய பல்லாயிரம் வீரர்களுள் ஒருவன்.
இத்திரைப்படத்தில் மிகச்சிறப்பான தித்திப்பான செய்தி ஈழத்து சுதந்திர பாடல் 5.34 நிமிடம் இடம் பெற்றுள்ளது தான்.
இப்படத்தின் கதை, வசனம், பாடலை வினுபாரதி எழுதியுள்ளார். இசை – நித்யன்கார்த்திக், பாடல்கள்- எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மற்றும் பிரசன்னா பாடியுள்ளனர். ஒளிப்பதிவு – அகர்செங்குட்டுவன், எடிட்டிங் – மோகன், படத்தொகுப்பு – மோகன், சண்டைபயிற்சி – கஜினி குபேந்தர் மற்றும் எண்ணற்ற நடிகர், நடிகைகள் பங்கு பெற்றுள்ளனர்.
இத்திரைப்படத்தில் அன்பு, பாசம், ஏக்கம், துரோகம், கோபம், வீரம், முடிவு என அனைத்தையும் எதார்த்தமான உண்மைகளை அப்பட்டமாக கொண்டு அமைந்துள்ளது. இதன் தயாரிப்பு – திரைக்கதை – இயக்கம் சி.நிரோஜன் D.F.Tech. இது எனது இரண்டாவது படைப்பு முடித்தால் புலம்பெயர்ந்த நாடுகளில் வெளியிட உதவி செய்யுங்கள்.
நன்றி
இவண்
சி.நிரோஜன் D.F.Tech
00919094740735
00919003125148

No comments:

Post a Comment