Translate

Thursday, 29 December 2011

இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருகிறது - கனேடிய வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருகிறது - கனேடிய வெளியுறவு அமைச்சர்
03 12 2011
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் John Baird கனேடிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தக் கோரிக்கையை விடுத்தார்.



கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இலங்கை தொடர்பாக விமர்சனம் வெளியிட்ட பின்னர் முதல் தடவையாக வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு எதிராக கருத்துக்கூறியிருக்கிறார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறுகிறது.

எனினும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வருகிறது.

இந்தநிலையில் போர்முடிவடைந்து இரண்டு வருடங்களாகியும் இலங்கை அரசாங்கம், நல்லிணக்கம் தொடர்பி;ல் உரிய முனைப்புக்களை மேற்கொள்ளவில்லை என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருவதை காணக்கூடியதாக இருப்பதாகவும் கனேடிய வெளியுறவு அமைச்சர் John Baird தெரிவித்தார்

No comments:

Post a Comment