Translate

Sunday, 8 January 2012

த.தே.கூட்டமைப்பு குழு 14 ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை


தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு சுமார் 14 ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அங்கிருந்தும் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை குறித்த போராட்டம், இலங்கையில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அரசியல் அந்தஸ்து, இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆபிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக அறிய முடிகிறது.
குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் குறித்தும் விரிவாக இரு பகுதியினரும் கலந்துரையாடியதாகத் தெரியவருகின்றது.
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மாநாட்டில் இந்த நாடுகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டதாகவும் அறிய முடிந்தது.
இந்த நாடுகள் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஜெனீவா மாநாட்டில் எடுக்கக்கூடும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment