1948ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற் கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான செய்தியினை Diario latarde ஊடகமானது வெளியிட்டிருந்தது.
இதில் 2008ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு மே 18 வரையான காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீதான உச்சக்கட்ட இன அழிப்புக்கள் (Genocide) மேற்கொள்ளப்பட்டிருப்பதையும், அங்கு மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இப்படுகொலையில் 40,000 பொது மக்கள் (Civilians) கொல்லப்பட்டும் 146,679 மக்கள் காணாமற் போயும் உள்ளனர் என ஆர்ச் பிஷப் ராயப்பு ஜோசப் அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தமிழினத்திற்கான நீதி வேண்டி குரல் கொடுத்துவரும் பிரித்தானிய தமிழர் பேரவையானது இச் செய்திக்கான ஆதாரங்களை Diario latarde ஊடகமூடாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பாகம் ஒன்று 24.01.2012 செவ்வாய்க்கிழமை அன்று வெளிவந்தது. இதனை 48 மணித்தியாலங்களில் 2கோடியே 22இலட்சம் மக்கள் பார்வையிட்டிருப்பதாக அவ் ஊடகம் குறிப்பிட்டிருக்கின்றது. இதில் பாகம் இரண்டு வெளியீடு 27.01.2012 அன்று வெள்ளிக்கிழமை வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment