இலங்கை இராணுவம் புலிகளுடனான போரில் நச்சுவாயுக் குண்டுகளை பாவித்தது எனவும் இதனால் பல போராளிகளும் பொதுமக்களும் உடல் கருகி இறந்ததாகவும் பல புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ஆனால் இராணுவத்தினரின் முகாம் வளாகத்தில் காணப்பட்ட முகமூடிகள் சிலவற்றை ஒருவர் படம்பிடித்துள்ளார்.
குறிப்பாக நச்சுவாயுப் பிரயோகங்களை மேற்கொள்ளும்போது தாம் பாதிப்படையாமல் இருப்பதற்காக இராணுவத்தினர் பாவிக்கும் முகமூடிகள் இவையாகும். அரசசார்பற்ற நிறுவனத்தில் வேலைசெய்யும் தமிழர் ஒருவர் இராணுவ முகாமுக்குள் செல்லும் வேளையிலும் மற்றும் இராணுவத்தினர் -புலிகளுக்கிடையே கடும் சண்டை இடம்பெற்ற இடங்களிலும் இம் முகமூடிகளைக் கண்டு அதனைப் புகைப்படம் எடுத்துள்ளார்.
அக்கராயன் உருத்திரபுரம் சிவநகர் பகுதியிலும் இவை காணப்பட்டதாக அவர் மேலும் அதிர்வுக்குத் தெரிவித்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் பிரிவில் இருந்த இந் நபர் இராணுவக் கட்டுப்பாட்டு இடங்களிலும் இன்னும் சொல்லப்போனால் இராணுவ முகாம் வளாகங்களுக்குள்ளும் வேலைசெய்துள்ளார். போரில் இராணுவத்தினர் இம் முகமூடிகளைப் பாவித்துவிட்டு பின்னர் அதனை இராணுவ முகாம் குடோனில் இதனைக் களற்றிப்போட்டுள்ளதாகவும் மற்றும் சில முகமூடிகள் இராணுவ முகாம்களின் வளாகத்தில் கணப்படுவதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இம் முகமூடிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருப்பதன் மூலம் தாமே மாட்டிக்கொண்டுள்ளனர். குறிப்பாக உருத்திரபுரம் சிவநகர் பகுதியிலும் மற்றும் முறிப்புப் பகுதியிலும் இராணுவத்தினர் சண்டையிட்ட பகுதிகளில் இருந்தா இவ்வகையான முகமூடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலிகள் நின்று போரிட்ட பகுதிகளில் அவை காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் போரின்போது இரசாயன ஆயுதங்களை பாவித்தார்கள் என்பதும் அது தம்மைத் தாக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக இதனை அவர்கள் அணிந்துள்ளார்கள் என்பதும் தற்போது ஆதாரத்தோடு நிருபனமாகியுள்ளது.

No comments:
Post a Comment