Translate

Tuesday, 31 January 2012

லண்டனில் கருணா மீது நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை: உடையும் குட்டுகள் !

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணா கள்ளப் பாஸ்போட்டில் லண்டன் வந்தவேளை அவரை பிரித்தானியப் பொலிசார் கைதுசெய்தமை யாவரும் அறிந்ததே. அவர் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார் சித்திரவதைகளை மேற்கொண்டார் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி அவர் மேல் வழக்குத் தொடர சில சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் முனைப்புக் காட்டி வந்தனர். ஆனால் அவை அனைத்தையும் பிரித்தானிய அரசாங்கம் தட்டிக்கழித்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பிரித்தானிய சட்டத்துறை அவர்மேல் போடப்பட்ட வழக்குகளை ஆதாரமற்றவை எனக் கூறி தட்டிக்கழிக்க காரணம் என்ன ? அன்றைய நிலையில் இலங்கை அரசுடன் அதிருப்த்தியில் இருந்த பிரித்தானியா ஏன் இவ்வாறு ஒரு முடிவை எடுத்தது ?

இது போன்ற சில கேள்விகளுக்கு விக்கி லீக்ஸ் தற்போது பதில் கொடுத்துள்ளது. அதாவது கருணா குற்றமிழைத்தது பிரித்தானிய அரசுக்குத் தெரியும் எனவும் ஆனால் அவருக்கு எதிராக சாட்சிசொல்ல எவரும் வரமாட்டார்கள் என்று பிரித்தானிய அரசு கருதியதாக அமெரிக்க தூதுவர் தமது தலைமைக்கு செய்தி அனுப்பியுள்ளார். அது மட்டும் அல்ல ஒரு வேளை பிரித்தானிய நீதிமன்றில் கருணாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சில சாட்ச்சிகளை தாம் விசாரிக்க இலங்கை செல்ல நேர்ந்தால் அதற்கான அனுமதியை இலங்கை தராது என்று பிரித்தானியா திடமாக நம்பியதாகவும் அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுளது. எனவே இலங்கை அரசு அனுமதி தராது என்ற ஒரே காரணத்தால் தமிழர்களால் போடப்பட்ட சில வழக்குகளை பிரித்தானியா தள்ளுபடி செய்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவில் சட்டத்துறை வெளியுறவுத் துறை வருவாய் துறை என பல துறைகள் காணப்பட்டாலும் அவை தனித் தனியாக இயங்குவதாகவும் தமக்கான முடிவுகளை அவையே எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவ்விடையத்தில் சட்டத் துறையும் வெளிநாட்டு அமைச்சும் மற்றும் குடிவரவுத் துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

விக்கி லீக்ஸில் உள்ள தகவல் தொகுப்பு: இரகசியக் கோவை இலக்கம்: 08COLOMBO462

No comments:

Post a Comment