ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான உறவானது ஆழமானது. தொன்று தொட்டு வரலாறுகளின் அடிப்படையில் நோக்கும் போது தொப்புள் கொடி என்ற இறுக்கமான பந்தத்தினால் பிணைக்கப்பட்டது. ஈழ மக்களின் ஒவ்வோர் வலிகளையும்,
ஈழ மக்கள் சுமந்த அவலங்களையும் பார்த்தும், கேட்டும், எமக்காக கண்ணீர் வடித்தும் இரக்கம் கொண்டவர்களாக, ஈழ மக்களுக்காகப் பல அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் புரிந்தவர்களாக எம் தமிழகச் சொந்தங்கள் விளங்குகின்றார்கள்.
ஈழத்தின் துயர் கண்டு தம் இயல்பு நிலையினைக் கூடத் தொலைத்து கண்ணீர் விட்டு எமக்காக கலங்கிய பெருமை எம் தமிழகச் சொந்தங்களிடம் உண்டு.
http://www.thamilnattu.com/search/label/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D
http://www.thamilnattu.com/search/label/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D
No comments:
Post a Comment