பல நாடுகளில் தேசியத்தலைவர் மற்றும் தேசியத் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதைப்போலவே பிரித்தானியாவிலும் தேசியத்தலைவரின் படம் பிரித்தானியக் கொடியோடு சேர்த்து வெளியிட்டதில் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் [ www.rste.org ] ஆகிய நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்.
இதைப்போன்ற முத்திரைகளை பிரித்தனியாவைச் சேர்ந்த எவரும் வெளியிடலாம் என்றபோதும். படங்கள் சிறந்த ஆய்வுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும்.
அப்படி அனுமதிக்காவிடின் கட்டிய பணத்தை திரும்பத்தருவார்கள் என்பது சட்டம். ஆகவே தேசியத் தலைவரின் படம் அடங்கிய முத்திரைக்கு ரோயல் மெயில் ஒப்புதல் அளித்தே வெயிளிட்டுள்ளது.
இந்த முத்திரை முதலாம் தர [ first class stamp ] முத்திரையாகும், இதை உலக நாடுகள் முளுவதுக்கும் அனுப்பப்படும் கடிதங்களில் ஒட்டி அனுப்பலாம். ஆனால் சாதாரன முதல் தர முத்திரையை விட இந்த முத்திரை சற்று விலை அதிகம். முத்திரை தேவைப்படின் எமது info@rste.org மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.
நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
No comments:
Post a Comment