Translate

Thursday 5 January 2012

அமெரிக்க சீனாவிடம் கையேந்தும் நிலை எதர்காலத்தில் வரும் மற்றும் அடுத்தமாதம் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலும் வருகிறது..

தற்போது யூரோ வலய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிகளால், சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. யூரோ நாணயம் தக்க வைக்கப்பட வேண்டுமென ஆறுதல் கூறும் சீனா, அந் நாடுகளின் அரச முறிகளை வாங்குவதற்குத் தயங்குகிறது.அதாவது 2011 இல் 1.7% மாக இருந்த பிரான்ஸின் பொருளாதார வளர்ச்சி 2012 இல் 0.3% மாக குறைவடையுமென டாகொங் கணிப்பிடுகிறது.


சீன அரசின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், இலங்கையுடனான பொருளாதார வர்த்தகமானது 2.1 பில்லியன் டொலர்களை கடந்த வருடம் எட்டியுள்ளதெனக் கூறப்படுகிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டு இருப்பதால், சீனாவின் முதலீடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அதிகரிக்கிறது.ஆகவே, ஆசியாவிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளைக் குறிவைத்தே சீனாவின் நகர்வுகள் அமைகிறதெனலாம்

இருப்பினும் துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் இந்தியாவைச் சுற்றி முத்துமாலை தொடுக்கும் சீனாவின் வியூகத்தை உடைக்கும் முயற்சியினை, இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொள்வதனை கடந்த சில மாதங்களாகக் காணக்கூடியதாகவிருக்கிறது. ஆகவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கையைச் சூழ அமைந்துள்ள நாடுகளில், அமெரிக்க – இந்திய அணிக்கும், சீனாவிற்குமிடையே ஆரம்பித்திருக்கும் பனிப்போரில் இலங்கை எங்கே தள்ளப்படப் போகிறது அல்லது பலவீனமானதொரு புள்ளியாக மாறப்போகிறது என்பதனை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
for 6 timer siden · Synes godt om
Robin Sabaseelan Nichilappillai அமெரிகா சீனாவிடம் மட்டிவிட்டது. அமெரிக வெளி நாட்டு டொலரில் 60 வீதம் சீனாவிடம்தான் அடைமானம் உள்ளது.நீங்கள் கணிப்பது தவறு. யூரோ நாணயத்தில் தான் சீனா வர்தகம் செய்ய விருப்பம். தற்சமயம் ஐரோப்பாவில் யூரோவில் உள்ள வறிய நாடுகளின் நெருக்கடிகளால் யூ...Vis mere
for 21 minutter siden · Synes godt om
Robin Sabaseelan Nichilappillai சீனாவும் இந்தியாவும் சேர்ந்து ஆசிய நாணயம் செய்யும் முயற்சி நீண்ட காலமாக நடந்து கொண்டு இருக்கு. அதற்க்கு இடையூராக உள்ள விடையம், இரண்டு அரசுகளின் தேசிய அரச முறிகளை இரண்டு அரசும் ஓருவருக்கொருவர் திறந்து காட்ட முடியாமல் உள்ளது. பயம் காரண்ம். ஐெர்மன் பிரான்ஸ் இரண்டு நாடுகளும் பயத்தை நீக்கி ஓருவரை ஓருவர் நம்பி இந்த யூரோவை செய்தார்கள். அதர்க்கு இன்னும் ஓரு காரணம் உண்டு. பிரான்ஸ் இனம் ஐெர்மனில் இருந்து வந்தவர்கள்.
for 14 minutter siden · Synes godt om
Robin Sabaseelan Nichilappillai உள்ளூர சீன பிரதம மந்திரிக்கும், இந்தய பிரதம மந்திரிக்கும் தொலைபேசி தொடர்பு நேரடியாக உள்ளது. எந்த முன் அனுமதி இன்றி இரண்டு பிரதம மந்திரிகள் உரையாடுவது வளமை.

No comments:

Post a Comment