Translate

Tuesday, 31 January 2012

தீர்வுப் பேச்சில் புலிகளைவிடவும் கூடிய நிபந்தனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்துவருகிறது.


நிபந்தனை வேண்டாம் திறந்த மனதுடன் வாரீர்; கூட்டமைப்பை அழைக்கிறார் பஸில்
news
தீர்வுப் பேச்சில் புலிகளைவிடவும் கூடிய நிபந்தனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விதித்துவருகிறது. இப்படி நடந்துகொள்ளாமல், திறந்த மனதுடன் பேசுவதற்குக் கூட்டமைப்பு முன்வரவேண்டும்.


 
 இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ. 
 
ஜனாதிபதி மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் புலிகளுடன் பேச்சு நடத்த முற்பட்ட போது பல நிபந்தனைகளை புலிகள் முன்வைத்தனர். ஆனால், அவற்றை நாம் நிராகரித்தோம். எமது கூற்றை ஏற்று, அவர்கள் பேச்சுக்கு வந்தனர். எப்போதும் சமரசப் பேச்சுகளில் முன் நிபந்தனை தேவையற்றது. ஆனால், இப் போது புலிகளைவிடவும் கடுமையான நிபந்தனைகளைக் கூட்டமைப்பு முன் வைக்கின்றது. இப்படி நடந்து கொள்ள வேண்டாம். திறந்த மனதுடன் பேசுவோம்; வாருங்கள் என்றார் அமைச்சர் பஸில்.

No comments:

Post a Comment