பிரான்சில் “வன்னிமயில் ’’ விடுதலைப்பாடல் நடனப்போட்டி பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு வருடம் தோறும் நடாத்திவரும் “வன்னிமயில்’’ 2011 விடுதலைப்பாடல் நடனப்போட்டி ( தெரிவுப்போட்டிகள் ) 08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடனும், அகவணக்கத்துடன் செவரோன் நகரத்தில் ஆரம்பமாகியது. மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவுகளில் அதிகளவிலான போட்டியாளர்கள் பங்கு கொண்டதினால் அவர்களுக்கிடையேயான தெரிவுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
போட்டியாளர்கள் தமது திறமைகளை எல்லாம் வெளிக்காட்டியிருந்தனர். போட்டியின் நடுவர்களாக சுவிஸ் நாட்டில் இருந்தும், கொலேன்ட் நாட்டில் இருந்தும் வந்து சிறந்த போட்டியாளர்களை இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்திருந்தனர். பிற்பகல் இந்த போட்டி நிகழ்வை கண்டு கழிக்க செவரோன் மாநிலமுதல்வர் ஸ்ரீபன் அவர்கள் வந்திருந்தோடு மட்டுமல்லாது அவரை சிறப்பிக்கும் வண்ணம் அண்மையில் பிரான்சு வாழ் தமிழ்மக்களுக்கு பெருமை சேர்த்த தமிழீழ இலட்சனைகளுடன் வெளிவந்த தபால் முத்திரைகள் மண்டபத்திற்கு வந்திருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று கரகோசம் செய்ய செவரோன் தமிழ்ச்சங்கத்தின் தலைவரால் முதல்வருக்கு கொடுக்கப்பட்டது.
மிகுந்த சந்தோசத்துடன் பெற்றுக்கொண்ட முதல்வர் தனது சிற்றுரையில் செவரோன் மாநகரம் ஒரு குட்டித்தமிழீழம் என்றும்; தான் தமிழீழமக்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் கூறினார். அதனைத்தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மத்தியபிரிவில் மட்டும் இருவர் ஒரேயளவில் புள்ளிகளைப்பெற்றுக்கொண்டதால் 11 பேரும் ஏனைய பிரிவுகளில் பத்துப்பேராக 31 பேர் இப்பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் இவர்களுடைய தெரிவுகள் எவ்வாறு நடைபெற்றன போட்டியாளர்கள் எவ்வாறு தங்கள் பாடலுக்குக்கான வடிவத்தினை வெளிப்படுத்தினார்கள் எவ்வாறு அவைவெளிப்படுத்த வேண்டும்.
போட்டியாளர்களின் திறமைகள், உணர்வுகள் அவை காட்டிய விதங்கள் பற்றி இப்போட்டிக்கு நடுவர்களாக கடமையாற்றியவர்கள் தெரிவித்திருந்தனர். வன்னிமயில் தெரிவுக்கான இறுதிப்போட்டி எதிர்வரும் 20.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 11. 00 மணிமுதல் செவரோன் மாநகரத்தில் நடைபெறவுள்ளன. 08.01.2012 தெரிவுப்போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், மற்றும் குழு நடனப் பிரிவுகளுக்கிடையான போட்டிகள் இந்நாளில் நடைபெறவுள்ளன. 08.01.2012 நடைபெற்ற மத்தியபிரிவு மொத்தம் 16 போட்டியாளர்களும், மேற்பிரிவு மொத்தம் 24 போட்டியாளர்கள் அதி மேற்பிரிவு மொத்தம் 22 போட்டியாளர்கள், இவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களின் விபரங்கள் பின்வருமாறு: மத்தியபிரிவு கலிஸ்டஸ் சுரேஸ் ஸ்டனிசியா சிறிதரன் உமையாள் சதீஸ்வரன் நிதுசா மதிபாலா ஆதிரை நல்லையா அதிசயா அமிர்தராஜா ஆரண்யா பாலச்சந்திரன் பொஸ்னா லஜீந்திரன் சௌமியா மகேந்திரராஜா சாதனா சிவதாஸ் சிந்தியா குலநாதன் விவேக்கா மேற்பிரிவு இந்திரஜித் நேதிரா நடராஜா நிசாந்திகா திருஞாசுந்தரம்; ஆதாங்கனி; தர்மராஜா சிந்துஜா மமான்ஸ் மொபில்டா ஆனந்தக்குமார் மயூரிக்கா செல்வரதன் ஜெனுசா சிவதாஸ் சிவப்பிரியா சீராளன் திவியா ரவீந்திரன் ரம்மியா
No comments:
Post a Comment