Translate

Thursday, 9 February 2012

22ம் திகதி பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதம் !

வரும் 22ம் திகதி(புதன்கிழமை) பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை நிலை குறித்து விவாதம் ஒன்று நடைபெறவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இல்பேஃட் எம்.பி லீஸ்கொட் இந்தக் கோரிக்கையை சபாநாயகரிடம் விடுத்துள்ளார் எனவும், இதற்கு அமைவாகவே இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தமிழர்களுக்கு ஆதரவான எம்.பீக்கள் இதில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், இலங்கை தூதுவராலயம் தமக்குச் சார்பான எம்.பீகளை இந்த விவாதத்துக்கு அனுப்ப முழு மூச்சாக இறங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது.


எனவே தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருக்கும் எம்.பீகளை, தமிழர்கள் ஒன்றிணைத்து இவ்விவாதத்தில் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment