Translate

Thursday 9 February 2012

பத்து வயது சிறுமி "இளம்மேதை விசாலினி" ♣

பத்து வயதுச் சிறுமி விசாலினியிடம் பேசினால் ரோபோதான் நினைவுக்கு வரும். அப்படியொரு அறிவுக் கூர்மை. இன்றைய நிலையில் இவர்தான் இந்தியாவின் இளம்மேதை என்றால் கொஞ்சம் சந்தேகமும், வரத்தான் செய்யும். தோற்றம் அப்படி!
ஆனால் இந்த சந்தேகங்களுக்கெல்லாம் சரியான பதிலைத் தந்து, தான் ஒரு இளம்மேதை என்பதை நிரூபித்து வருகிறார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பதினொரு வயதுச் சிறுமி விசாலினி. அம்மா அகில இந்திய வானொலி முன்னாள் அறிவிப்பாளர், அப்பா சாதாரண எலெக்ட்ரீஷியன்.

"நூறு பக்கம் உள்ள ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் இருபது நிமிடத்தில் படித்த முடித்துவிடுவேன். அப்புறம் அந்தப் புத்தகத்திலிருந்து எந்த நேரத்தில் எதைக் கேட்டாலும் சொல்வேன். நான் ஒருமுறை படித்த புத்தகத்தை திரும்பப் படித்ததே கிடையாது. (அவர் படித்து முடித்த அத்தனை புத்தகங்களும் புத்தம் புதிதாக இருப்பதிலேயே அது புரிந்தது) அது எனக்கு மறக்கவே மறக்காது. பள்ளிக்கூட பாடத்தை எல்லாம் மொத்த பாடத்தையும் மூன்றே மாதத்தில் படித்து முடித்து விடுவேன். அப்புறம் பள்ளிக்கூடம் போர்தான்!' என்று படபடவென்று துடிப்பாய் பேசும் விசாலினி பத்து வயதில் எட்டாம் வகுப்பை எட்டிவிட்டார். அது தவிர வீடு நிறைய அவர் படித்து முடித்த புத்தகக் குவியல்கள்... அவற்றில் பல பி.ஈ., எம்.பி.ஏ. மாணவர்கள் படிக்கும் புத்தகங்கள். "இதெல்லாம் எதற்கு படிக்கிறாள்?' என்று அவர் தாய் ராகமாலிகாவிடம் கேட்டோம்.
"இவளுடைய வேகத்திற்கு நாம் படிக்க எதாவது கொடுத்துக்கொண்டே இருக்கணும் இல்லன்னா கவனம் தவறான வழிகளில் திரும்பிடும்... ஏன்னா அவள் பிரைன் அப்படி? நார்மலா ஒரு மனுஷனுக்கு "நுண்ணறிவுத்திறன் ஈவு' என்கிற வெலவ் Inteligent Quotent 90-ல் இருந்து 110 வரை இருக்கும். பிரபல மேடை பாடகி மடோனாவுக்கு இந்த IQ அளவு 140. பில்கேட்ஸின் IQ அளவு 160. உலகிலேயே இதுவரை IQ அளவு அதிகம் உள்ள நபர்னு தென்கொரியாவைச் சேர்ந்த கிங் உங் யங் என்பவரைச் சொல்வாங்க. அவரோட IQ அளவுகூட 200தான். ஆனால் விசாலினியைப் பொருத்தவரை இவளோட IQ லெவல் 225ன்னு ஆய்வு செய்து சொல்லியிருக்காங்க.
இதற்கு அடையாளம்தான் அவள் எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வுகள்.
பில்கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் நடத்தும் MCP என்கிற தேர்வை மார்ச் மாதம் 21-ஆம் தேதி எழுதினாள். அதுல 87% மார்க். அப்புறம் அதைவிட கஷ்டமான சின்கோ சர்டிஃபைட் நெட்ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90% எடுத்தாள். கடந்த ஜூலை 4-ம் தேதி அவங்களே நடத்தும் CCNA செக்யூரிட்டி என்கிற தேர்வையும் எழுதி 98% வாங்கியிருக்கா....
இந்தத் தேர்வுகள் எல்லாமே பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் தங்கள் அறிவுத்திறனை நிரூபிக்க எழுதுபவை. உலகளவில் சாஃப்ட்வேர், நெட்வொர்க்கிங் இண்டஸ்ட்ரியில் வேலை கிடைப்பதற்காக எழுதப்படும் தேர்வுகள். இதில் வெற்றி பெறுபவர்கள் பெரிய பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் உட்காரலாம். விசாலினி இது எல்லாத்தையும் இப்பொழுதே பாஸ் பண்ணிட்டா... இனி எங்கேயும் வேலைக்குச் சேரலாம். ஆனா அதுக்கு அடிப்படை கல்வித் தகுதி வேணுமே... விட்டா இப்பொழுதே கூட பி.ஈ பாஸ் பண்ணுவா. ஆனால் அதுக்கு குறைந்தபட்சம் எட்டாவது பாஸ் ஆகணும். அதற்கு பதினொரு வயதில் எட்டாவது தேர்வு எழுத சிறப்பு அனுமதி கிடைக்கணும். அதைத் தருவதாக கவர்மென்ட்ல சொல்லியிருக்காங்க... அதைத் தருவதாக கவர்மென்ட்ல சொல்லியிருக்காங்க... அதைத்தான் விசாலி எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா!
இவளைப் போலவே பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் பன்னிரண்டு வயதில் இந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றான். அவனை பாகிஸ்தான் இராணுவம் "PRIDE OF PAKISTAN' என்று இராணுவ வெப்சைட்டில் போட்டு கௌரவித்தது. ஆனால் அவனைவிட இரண்டு வயது குறைவான நிலையில் விசாலினி அதைவிட பெரிய சாதனைகள் செய்தும் "PRIDE OF INDIA' என்று பாராட்ட ஆள் இல்லை!
விவரம் தெரிந்தவர்கள் இவளைப் பற்றி வெப்சைட்டில் பார்த்துவிட்டு அமெரிக்காவில் இருந்தெல்லாம் போனில் பாராட்டுகிறார்கள். ஆனால் உலகளவில் எவ்வளவு பாராட்டு கிடைத்தாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பாராட்டு வாங்கணும்கிறதுதான் விசாலினிக்கு ஒரே கனவு..' என்று தன் மகளின் கனவைப் பற்றி சொல்கிறார் தாய் ராகமாலிகா.
♣ அந்தக் கனவு நனவாகவும் விசாலினி பெரிய விஞ்ஞானியாக வளரவும் வாழ்த்துக்கள் ♣

No comments:

Post a Comment