கொழும்பு வெலிக்கடைச் சிறையில் ஆண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்றது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற பெரிய கிரிமினல்களால் இக்கற்பழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தூதரகம் அறிந்து வைத்திருக்கின்றது.
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் பிரதம சட்டத்தரணிகளில் ஒருவர் எம். ஏ. சுமந்திரன். இவர்தான் இக்கற்பழிப்பு நடவடிக்கைகள் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு சூசகமாகத் தெரிவித்து இருக்கின்றார்.
வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றமையை திஸ்ஸநாயகம் விரும்பவில்லை என்றும் காரணம் இங்கு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்ற பெரிய கிரிமினல்களால் கற்பழிப்பு உட்பட ஏனைய வன்செயல்களுக்கு உள்ளாகலாம் என்றும் அஞ்சுகின்றார் என்றும் சுமந்திரன் தூதரக அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்று உள்ளன.

No comments:
Post a Comment