Translate

Monday, 20 February 2012

இலங்கை இராணுவத்துக்குத் தண்டனை வழங்க இயலாது : சம்பிக்க


இலங்கை இராணுவத்துக்குத் தண்டனை வழங்க எந்தவொரு சர்வதேச சக்தியாலும் இயலாது. நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மாலைதீவின் சூழலை இலங்கையிலும் நடத்தி விடலாம் என்று நினைப்பது மேற்குலக நாடுகளின் பகல் கனவாகும். வலய நாடுகள் எதிர்கொள்கின்ற ஆபத்துகளுக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,
அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்படுவது இது முதற்தடவையல்ல.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவத்தை சர்வதேச விசாரணைகளுக்குள் உட்படுத்த இடமளிக்கப் போவதில்லை. ஆசிய வலயத்தின் மீது குறி வைத்த மேற்குலக நாடுகள் காய் நகர்த்தி வருகின்றன. ஆசிய வலய நாடுகளின் பொருளாதாரத்தை சீரழிப்பதே அவர்களின் நோக்கமாகும்.
நாட்டைப் பாதுகாப்பது அனைத்து மக்களினதும் பொறுப்பாகும். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை விட அமெரிக்க தூதரகம் முன்பதாகவே கூடுதலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசையும் இராணுவத்தையும் பாதுகாக்க வேண்டியது இந்நாட்டு அனைத்து இன மக்களினதும் கடமையாகும். இதற்காக ஓரணியில் திரள வேண்டும் எனக் கூறினார்.
அதேவேளை :
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர்க் குற்ற விடயங்கள் குறித்து இராணுவ விசாரணை மன்றம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உண்மை சம்பவங்கள் குறித்து பொறுப்பு வாய்ந்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புராச்சி தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் செனல் 4 தொலைக்காட்சியின் போர்க் குற்ற ஆவணங்கள் தொடர்பாக ஆராயப்படுவதுடன் இராணுவத்திற்கு எதிராக உள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை மன்றம் ஊடாக பதில் கிடைத்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புராச்சி தொடர்ந்தும் கூறுகையில்,
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விசேடமான விசாரணைக்குழுவொன்றை அமைத்து இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற உண்மை சம்பவங்கள் குறித்தும் இராணுவ வீரர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றõர். இவ் விசாரணைகள் குழுவின் தலைவராக கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா செயற்படுகின்றார்.
இக்குழுவானது வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு உண்மை சம்பவங்களைக் கண்டறியும் இதனால் இராணுவத்திற்கு எதிராக காணப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கிடைத்து விடும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment