Translate

Monday, 20 February 2012

ஜெனீவாவில் தமிழர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் !


newsஇதுவரை காலமும் ஈழத்தில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்த இலங்கை அரசு, தற்போது நேரடியாகவே புலம்பெயர் தமிழர்களோடு விளையாட ஆரம்பித்துவிட்டது. இருக்கும் சில நூறு சிங்களவர்களை வைத்து தமிழர் போராட்டங்களை குழப்ப நினைக்கும் இலங்கை அரசுக்கு ஜெனிவா ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக அமையவேண்டும்... செய்வார்களா தமிழர்கள் ?

ஜெனீவாவில் ஐ.நா வின் மனித உரிமை மாநாடு மார்ச் மாதம் ஆரம்பமாக உள்ளது யாவரும் அறிந்ததே. இம் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர சில வல்லரசு நாடுகள் முனைப்புக்காட்டி வருகிறது.

இதனை தமிழர்கள் சாதகமாகப் பயன்படுத்தி தமது காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பிரித்தானியவில் உள்ள சில முன்னணி தமிழ் அமைப்புகள் குறிப்பிட்ட சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியும் உள்ளனர். இதன் ஒரு அங்கமாக ஜெனீவாவில் மாநாடு நடைபெறும் போது ஐ.நா மன்றத்துக்கு முன்னால் தமிழர்கள் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதனை முறியடிக்க, இலங்கை அரசானது பல வழிகளில் முனைப்புக்காட்டி வருகிறது. தற்போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பிரித்தானியவில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் கம்சா இத்தாலியில் இருந்தும், மற்றும் லண்டனில் இருந்தும் பேரூந்துகளை ஒழுங்குசெய்யவுள்ளார் என அறியப்படுகிறது. இப் பேரூந்துகளில் சிங்களவர்களை ஏற்றி ஜெனீவாவுக்கு கொண்டுசென்று அங்கே நடக்கவிருக்கும் தமிழர்களின் கவனயீர்ப்புப் போராட்டங்களை, குழப்பி அதனை முறியடிக்க கம்ஸா திட்டம் தீட்டியுள்ளாராம். பிரித்தானியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்துக்கு மேல் தமிழர்கள் வாழ்கிறார்கள். மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் சில ஆயிரம் சிங்களவர்களே ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் வசித்து வருகின்றனர். இவர்களை ஒன்று திரட்டி தமிழர்களின் போராட்டத்தை முடக்க தற்போது திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிங்களவர்களின் ஒற்றுமையானது, தமிழர்களின் ஜெனிவாப் போராட்டத்தை குலைக்க பயன்படும் என கம்ஸா கணக்குப் போட்டுள்ளார். லட்சக்கணக்கில் தமிழர்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து என்ன பயன் ? சில நூறு சிங்களவர்கள் திரண்டு வந்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் அவர்களைக் காட்டிலும் பன்மடங்காச் சென்று எமது பலத்தைக் காட்டுவோமா ? இல்லை எமக்கு என்ன என்று சொல்லிவிட்டு வீட்டில் இருப்போமா ? பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, டென்மார், நோர்வே போன்ற நாடுகளில் இருந்து அனைத்துத் தமிழர்களும் திரண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும். தமிழ் அமைப்புகளுக்கு பலம்சேர்க்கும் நடவடிக்கையில் தமிழர்கள் ஈடுபடவேண்டும். இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நாடுகளை நாம் ஊக்குவிக்கவேண்டும். எனவே மார்ச் மாதம் நடக்கவுள்ள ஜெனீவா ஆர்ப்பாட்டத்துக்கு தம்மாலான அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டு வரவேண்டும். எமது பலம் என்னவென்பதனை உலகறியச் செய்யவேண்டும்.

இதுவரை காலமும் ஈழத்தில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்த இலங்கை அரசு, தற்போது நேரடியாகவே புலம்பெயர் தமிழர்களோடு விளையாட ஆரம்பித்துவிட்டது. இருக்கும் சில நூறு சிங்களவர்களை வைத்து தமிழர் போராட்டங்களை குழப்ப நினைக்கும் இலங்கை அரசுக்கு ஜெனிவா ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக அமையவேண்டும்... செய்வார்களா தமிழர்கள் ?

No comments:

Post a Comment