Translate

Thursday, 2 February 2012

இலங்கை அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம்


இலங்கை அரசுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டம்

இந்திய மாநிலமான தமிழகத்தின் சென்னையில் திடீரென்று விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
சென்னை, நுங்கம்பாக்கத்தில் இடம் பெற்றுவரும் சர்வதேச தோல் பொருள் கண்காட்சியில் பங்கு பற்றியுள்ள இலங்கை நிறுவனத்திற்கு கண்டனம் வெளியிட்டும் அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக் கோரியும் இன்று காலை 10 மணியளவில்(இந்திய நேரம்) விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ‘அனுமதியோம்! அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதியோம்! இனவெறி சிங்களக் கொடி தமிழகத்தில் பறக்க அனுமதியோம்! அனுமதியோம்! ஈழத் தமிழரைக் கொன்று குவித்த இனவெறி இலங்கை நிறுவனத்தை தமிழகத்திற்குள் அனுமதியோம்! இலங்கை நிறுவனத்தை அனுமதித்த இந்திய அரசை கண்டிக்கிறோம்!’ என்று முழங்கியவாறே கண்காட்சி இடத்தை நோக்கிச் சென்றனர்.
அப்போது அரங்கினுள் நுழைந்த சிலர் அங்கு ஏற்றப்பட்டிருந்த இலங்கைக் கொடியை இறக்கி அதனை தீயிட்டுக் கொளுத்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.
வன்னி அரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உஞ்சை அரசன், பாலசிங்கம், து.கா. பகலவன், புதியவன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்திக் கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.

No comments:

Post a Comment