இந்திய நாடாளுமன்றக் குழு ஏப்ரல் 16ம் திகதி வருகை; தமிழர் நிலை குறித்து நேரடி ஆய்வு |
இந்திய மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு எதிர்வரும் அடுத்த மாதம் 16ம் திகதி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு தமிழர் நிலை குறித்து நேரடி ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் தங்கி இருக்கும் இந்த குழு, தற்போது சிறிலங்காவில் காணப்படுகின்ற அரசியல் சூழ்நிலை குறித்து ஆராய்வர் எனவும் வட மாகாணத்தில் யுத்த பாதிப்புக்கு உள்ளான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு செல்வதுடன், வவுனியா நலன்புரி முகாம்களையும் நேரில் சென்று பார்வையிடுவர் எனவும் கூறப்படுகிறது. போருக்கு பின் சிறிலங்காவில் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு சிறிலங்காவுக்கு வர இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. குறித்த தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று இதற்கான நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுஷ்மா சுவராஜ் தெரிவிக்கையில், தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிடுவர். தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்க்கவுள்ளோம். பாரதீய ஜனதா சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரகலாத் ஜோஷி, மேல் சபை உறுப்பினர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுகிறார்கள். இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செய்து வருகிறார். என்றார். அதேநேரம், இக் குழுவில் இடம்பெறும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் குறித்து இதுவரையில் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 29 March 2012
இந்திய நாடாளுமன்றக் குழு ஏப்ரல் 16ம் திகதி வருகை; தமிழர் நிலை குறித்து நேரடி ஆய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment