தங்களின் மேலான பங்களிப்பை நாடும் பொங்குதமிழ் மாநாடு 2012 (கருநாடகம்)

காலத்தின் கட்டாயத்தால் நாம் நம்மின வரலாற்றின் தவிர்க்கமுடியாத முக்கிய தருணத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம். வேதனைகளையும், சோதனைகளையும், துரோகங்களையும், காட்டிக்கொடுப்புகளனைத்தையும் இதுவரை கண்டு, அனுபவித்த ஓரினம் இவ்வுலகில் உண்டென்றால் அது நம் தமிழினமேயாம். நம்மைச் சுற்றிப் பின்னப்படும் சதிகளைத் தகர்த்து முன்னேற ஒரு வழி உண்டென்றால் அது நம்மின ஒற்றுமையும், ஒருமைப்பாடுமன்றி வேறேதுமில்லை.
உலகெங்கிலும் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட ‘பொங்குதமிழ்’ நிகழ்வானது நம்மை தமிழன் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றுபட்டு, நம் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம் மற்றும் பண்பாட்டை காத்திடும் கருவியாகவும், உலகிற்கு நம்மின ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் இந்தியாவில் முதன்முறையாக கருநாடகத்தில் முன்னெடுக்கப்படுகிறது.
பொங்கு தமிழ் 2012 கருநாடகம் மாநாட்டிற்குத் தமிழர்களாகிய நாம் அனைவரும் நமது கட்டாயக் கடமையென்றெண்ணி தங்களின் இனத்திற்க்கான பங்கெடுப்பாகத் தம்மால் இயன்ற வகையில் அனைத்துவித்ததிலும் உடல், உள்ள, பொருளுதவிகளையும், முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும், நல்கி தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழர் ஒற்றுமைக்கும் துணை நிற்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
பொங்கு தமிழ் 2012, கருநாடகம்.
PayPal மூலம் தங்கள் பங்களிப்பை வழங்கிட கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment