Translate

Wednesday, 7 March 2012

வண. இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மத குருமாரும் துரோகிகள் கடும் நடவடிக்கை வேண்டும்; ஜாதிக ஹெல உறுமய

rayappu_joseph_நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ள வண.இராயப்பு ஜோசப் தலைமையிலான 31 மதகுருமாரும் நாட்டின் இறைமைக்கு சவால் விடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய சம்மன் பில தெரிவித்துள்ளார். 



இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள குழுவினர் துரோகிகள் என்பதைத் தாங்களே நிரூபித்துவிட்டனர். உள்நாட்டில் எத்தகைய வேறுபாடுகள் இருந்தாலும் சர்வதேச சமூகத்தின் முன்னால் ஓரணியாக நிற்பதைப் பொருட்படுத்தாமல் துரோகிகளென நிரூபித்துள்ளனர். இனங்களுக்கு மத்தியில் பிரிவினைக்குக் காரணமறீணீச் செயற்படும் விடயம் இலங்கை அரசியல் அமைப்பை முழுமையாக மீறுவதாகும் என்று உதய கம்மன் பில கூறியுள்ளார். “ஆயர்மாரின் துரோகத்தனமான நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் இறைமையைப் பாதுகாக்க ஜனாதிபதி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment