யாழ் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி ஆகியவற்றின் பிரதம ஆசிரியரான ரி. செந்தில் வேலவரை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கும்படியும் லேக்ஹவுஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செந்தில்வேலவரை பதவி நீக்கவில்லை என்றால் மகிந்த ராசபக்சவின் கவனத்திற்கு கொண்டு வந்து செந்தில்வேலவரை பதவி நீக்குவேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா லேக்கவுஸ் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக யாழ் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி ஆகியவற்றின் பிரதம ஆசிரியரான ரி. செந்தில் வேலவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அரசியல்வாதிகளது, அல்லது அமைச்சர்களது எந்த அழுத்தங்களுக்கும் தான் தலைகுனியப் போவதில்லை என்று தெரிவித்தார்.
மிக மோசமான மனித உரிமை மீறல் நடைபெற்றிருக்கிறது. அதை வெளிப்படுத்த வேண்டியதும், அது தொடர்பாக முக்கிய கல்விமானும், நெடுந்தீவு பகுதியை சேர்ந்தவருமான கணபதிப்பிள்ளை அவர்களின் கண்டனத்தையும் வெளியிட வேண்டியது ஊடக தர்மமாகும். ஊடகமும், ஊடகவியலாளர்களும் அநீதிக்கும் கொடுமைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் துணை போக முடியாது. அதை தடுத்து நிறுத்த போராட வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை. அந்த கடமையைத்தான் நான் செய்தேன் என செந்தில்வேலவர் தெரிவித்தார்.
யாழ். தினகரன் தனது கருத்துக்களையும் செய்திகளையும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி உள்ளதை உள்ளபடியே வெளியிடும். மூன்றாம் தரப்பினரின் அழுத்தங்களுக்கு நான் அஞ்சமாட்டேன் என்றும் செந்தில்வேலவர் தெரிவித்தார்.
srilankamirror
srilankamirror
No comments:
Post a Comment