| பல்வேறு அழுத்தங்களை உலக நாடுகள் முன்வைத்தாலும் எமது நாட்டை நாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்; பாட்டலீ சம்பிக்க ரணவக்க |
![]()
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பிரேரணையினை கொண்டு வந்து ஒரு கடும்போக்கிற்குள் தள்ளிவிடுமாயின் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசு தயாராக உள்ளது என அமைச்சர் பாட்டலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
'நாட்டை சுற்றிவளைக்கும் மேற்குலக சூழ்ச்சியை தோற்கடித்து நாட்டை பாதுகாக்கும் தேசிய சுவராக மாறுவோம்' எனும் தொனிப் பொருளில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் அல்லது நாட்டிற்கு எதிரான பிரேரணைகள் மற்றும் அழுத்தங்களை பிரயோகித்தாலும் நாம் எமது நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காட்டிக்கொடுக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நண்பர்கள் இருப்பது போன்றே பகைவர்களும் உலகளாவிய ரீதியில் உள்ளனர். ஆனால் அவர்களை பகைவர்களை பகைவர்களாக எண்ணாது அவர்களுடன் கைகோர்ப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 12 March 2012
பல்வேறு அழுத்தங்களை உலக நாடுகள் முன்வைத்தாலும் எமது நாட்டை நாம் ஒரு போதும் காட்டிக் கொடுக்க மாட்டோம்; பாட்டலீ சம்பிக்க ரணவக்க
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment