Translate

Sunday, 18 March 2012

ஈபிடிபி றீகன் � கமல் மோதல்! களைகட்டியது சிறீதர் தியேட்டர் !

ஈபிடிபி றீகன் - கமல் மோதல்! களைகட்டியது சிறீதர் தியேட்டர் !
ஈபிடிபியின் தலைமைப் பணிமனையான யாழ்ப்பாணம் சிறீதர் திரையரங்கில் ஈபிடிபியின் முக்கிஸ்தர்கள் இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகரசபையில் அங்கம் பெறுகின்ற ஈபிடிபி உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கு ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தலைமை தாங்கினார். நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் உரையாற்றிய பொழுது, யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் றீகன் உரை நிகழ்த்தியிருக்கின்றார்.

அவர் தனது உரையில், யாழ்.மாநகர சபையும் ஈபிடிபி கட்சியும் முற்றுமுழுதாக வியாபார நோக்கத்துடனேயே செயற்பட்டு வருகின்றன. மக்களுடைய தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் அது செயற்படவில்லை. குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் முற்று முழுதாக ஈபிடிபியினாலும் மாநகர சபையினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலங்களில் மட்டும் கரையோரமக்களின் உதவி தேவைப்படுகின்றது. இந் நடவடிக்கையினையே ஈபிடிபி கட்சியும் மேற்கொண்டு வருகின்றது. மக்களது தேவைகளை நிறைவு செய்வதற்கு ஈபிடிபியும் மாநகர சபையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதனை அடுத்து ஆத்திரமடைந்த அமைப்பாளர் கமல் பாய்ந்து சென்று றீகனின் சேட்டைப்பிடித்து அவரைத் தாக்கியிருக்கின்றார். அதன் பின்னர் றீகனும் அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார். இதனை அடுத்து ஈபிடிபி கட்சிக்குள் பதட்டம் நிலவியதாக மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கரையோரப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தாவைவிடவும் பிரதி முதல்வர் றீகனுக்கே செல்வாக்கு இருப்பதாகவும் இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஈபிடிபி தனது விளம்பரங்களில் றீகனுடைய பெயரைபக் குறிப்பிட்டு அதற்கு பக்கத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரினைக் குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment