பல வெள்ளை வான் கடத்தலில் சம்பந்தப்பட்டஈபிடிபி ரகு கழுத்து வெட்டிக் கொலை: புலிகள் கடிதம் அருகிலாம் !
திருகோணமலை, குச்சவெளியின் பெரியகுளம் பகுதியில் ஈ.பி.டி.பி சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அவரது சடலத்திற்கு அருகில் இருந்து 'எல்.ரீ.ரீ.ஈ.' என எழுதப்பட்ட காகிதத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மூதூரைச் சேர்ந்த ரகு நடன் அல்லது முத்து என மேற்படி நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காலை வேளையில் மேற்படி ரகு இனந்தெரியாத இரு நபர்களுடன் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர் இவர் முச்சக்கர வண்டி ஒன்றில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி ரகு 15 � 20 வருடங்களாக ஈ.பி.டி.பி உறுப்பினராக இருந்தவர் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இவர் மறைந்திருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இவர் இராணுவ உளவாளியாக செயற்பட்டு வந்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொலையாளிகள் கவனத்தை திசை திருப்ப புலிகளின் பெயரை ஒரு கடதாசியில் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரகு என்று அழைக்கப்படும் இந் நபர் பல வெள்ளை வான் கடத்தலில் சம்பந்தப்பட்டவர் என்றும், இவர்கள் போன்ற சிலரை அரசாங்கம் தற்போது கொலைசெய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சில மேற்குலகத்தின் அழுத்தங்களைச் சமாளிக்கவே, இலங்கைப் இரகசியப் பொலிசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மேலும் சில செய்திகள் கசிந்துள்ளது.
No comments:
Post a Comment