Translate

Tuesday, 6 March 2012

எம் தமிழ் உறவுகளே

இன்றய காலகட்டத்தில் மேற்குலகின் அனுசரணையுடன் முன்னெடுக்கும் போராட்டம் மட்டுமே வெற்றிபெறவாய்புண்டு.
புலம்பெயர் தமிழர்கள் எமது மேற்குலக ஆதரவாளர்களுடன் இணைந்து பணிகளை முன்னெடுத்தல் மிக மிக அவசியம்.
அகத்துத் தமிழர்கள் (த.தே.கூ) புலத்துத் தமிழர்களினதும் எமது ஆதரவு நாடுகளின்தும்பலத்தில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு என்று வேறு பலம் எதுவுமில்லை.


அமெரிக்கா தமிழர் அமைப்புக்கள்
கனடா தமிழர் அமைப்புக்கள்
பிரித்தானிய தமிழர் அமைப்புக்கள்
ஐரோப்பிய தமிழர் அமைப்புக்கள் (பல நாடுகள்)
அவுஸ்திரேலியா தமிழர் அமைப்புக்கள்
இந்தியத் தமிழர் அமைப்புக்கள்
மற்றய தமிழர் அமைப்புக்கள்

பல்வேறு முனைகளிலும் சாத்வீகப் போரினை முன்னெடுத்தால் மட்டுமே எமக்கு பலம் அதிகரிக்கும்.

நாட்டிலே மக்கள் த.தே.கூ பினை பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்துள்ளார்கள். 
அவர்கள் புலத்தினால் ஏற்படுத்திய பலத்தின் அடிப்படையில் மட்டுமே அகத்தில் காய்களை நகர்த்திக்கொன்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மார்ச் 2012 ஐ.நா. மனிதரி உரிமைகள் கூட்டத்தொடரில், எமது மேற்கத்தய ஆதரவு நாடுகளின் அலோசனையின் அடிப்படையில் த.தே.கூ கலந்துகொள்ளவில்லை. இதனை சரியாக புரிந்துகொண்டும், அகத்தில் மக்கள் த.தே.கூ பிடம் பொறுப்புக்களை கொடுத்திருக்கின்றார்கள் என்பதையும் புரிந்துகொண்டும் புலத்தில் நடவடிக்கை எடுத்தல் மிக மிக அவசியமானது. இல்லை எனில் எமது விடிவிற்கு தடையாக பேய்விடும் என்பதையும் புரிந்துகொள்ளல் மிக மிக அவசியமானது.

அத்துடன், த.தே.கூ தவிர்ந்த மற்றய அகத்துக் கட்சிகள் இப்போதே தாம்பாட்டில் மெல்ல மெல்ல சாத்வீகப் போராட்டம்களைத் தொடங்கல் வேண்டும். 

மேலும் ஒட்டுக்குழுக்களின் அட்டகாசத்தை அடக்குவதற்காக அரசியல் முறைகளில் நடவடிக்கை எடுப்பதற்கு அகத்திலும் புறத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

இவைகளை மனதில்கொண்டு இயங்குதல் நன்றே.

மேலும், செய்திகளை மறைத்தும் திரித்தும் பரப்புரை செய்வோர்பற்றி கவனமாக இருக்கவும்,
கொடிய அரசின் சார்பில் ஊடுருவி இயங்குவோரும் இருக்கின்றனர் என்பதுபற்றியும் மிக மிக கவனம் செலுத்தவும்.

சிறிவாசு

No comments:

Post a Comment