Translate

Tuesday, 6 March 2012

ஜெனீவா கேளிக்கை விடுதியில் பணத்தைத் தொலைத்த சிங்கள ஊடகவியலாளர்கள்.


ஜெனீவா கேளிக்கை விடுதியில் பணத்தைத் தொலைத்த சிங்கள ஊடகவியலாளர்கள்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேணை குறித்து இலங்கை மக்களைத் தெளிவுபடுத்துவதற்கெனக் கூறி ஊடகவியலாளர் குழுவொன்றை இலங்கை அரசாங்கம் ஜெனீவாவிற்கு அனுப்பி வைத்தது.

இந்த குழுவில் இரண்டு ஊடகவியலாளர்கள் ஜெனீவாவிலுள்ள இரவுநேர கேளிக்கை விடுதிக்குச் சென்று அவர்களது பணப்பையைத் தொலைத்துள்ளனர்.
ஜெனீவா சென்ற இலங்கைக்குழுவில் ஏனையவர்களுக்குத் தெரியாமல், மிகவும் இரகிசயமாக இரவு நேரகேளிக்கை விடுதிக்குச் சென்ற இவர்கள் இருவரை இனந்தெரியாத சிலர் அச்சுறுத்தி பணப்பையைப் பறித்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன், இலங்கையின் தேசிய அடையாள அட்டை, கடனட்டை ஆகியவற்றையும் இவர்கள் தொலைத்துள்ளனர்.
எனினும், விடுதி திரும்பிய இவர்கள் இருவரும், தாம் விடுதலைப் புலிகள் சிலரினால் அச்சுறுத்தப்பட்டதாகவும், அவர்கள் தமது பணப்பையைப் பறித்துச் சென்றதாகவும் இலங்கைக் குழுவினரிடம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment