Translate

Friday 30 March 2012

ஆனந்த விகடனுக்கு இலங்கையில் மறைமுகத்தடை


இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகையான ஆனந்த விகடனில் வெளியான ஊடகவியலாளர் கார்த்திகேசு சுரேன் என்பவரின் வாக்குமூலம் இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் நீக்கப்பட்டு ,விநியோகம் செய்யப்பட்டுள்ளது.வன்னியில் யுத்தத்தின் இறுதி நாட்களில் நடைபெற்ற சம்பவங்களை ஈழநாதம் பத்திரிகையின் செய்தியாளர் கார்த்திகேசு சுரேன் ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அது தொடர்பாக ஆறு பக்கத்தில் அவரின் செவ்வியினை ஆனந்த விகடன் பிரசுரித்திருந்தது.

அத்துடன் தழிழ்வின் இணையத்தளம் மற்றும் உள்ளுர் பத்திரிகைகளும் மீள்பிரசுரம் செய்திருந்தது. இந்த வாக்கு மூலத்தை வாசிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள புத்தகசாலைகளில் பார்த்த போது ஆனந்த விகடன் சஞ்சிகையில் குறித்த ஊடகவியலாளர் சுரேன் வழங்கிய செவ்வி அடங்கி ஆறு பக்கம் கிழிக்கப்பட்டு நாடுபூராகவும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் சம்மந்தமான செய்திகள் வெளியாகும் போதும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதும் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறித்த ஆனந்த விகடன் சஞ்சிகை (28.03.2012) நேற்றைய தினம் யாழ்குடா நாட்டில் வெளியாகியிருந்தது இதனை வாங்கி குறித்த பகுதியைப் பார்த்த போது 6 பக்கம் கிழித்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி நாடுபூராகவும் 6 பக்கம் கிழிக்கப்கப்பட்டே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment