
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தி வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐநா கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். அதனால் இலங்கை மீது சர்வதேச விசாரணை, பிரேரணை தேவையில்லை என அவர் கூறியிருந்தார்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்த ஜகத் ஜயசூரிய இராணுவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறுவதைவிடுத்து இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை கடத்தி வருகிறது.
விசாரணைக்கு வலியுறுத்தும் ஐநா செயலாளர், சர்வதேச நிறுவனங்கள், மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் ஊடகங்கள் என்பவற்றின் கோரிக்கைகளை இலங்கை தட்டிக்கழித்து வருகிறது.
மனித உரிமை விடயங்களுக்கு மத்தியில் பல சமூகத்தினர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இரு அரசியல் செயற்பாட்டாளர்கள் டிசம்பம் மாதம் கடத்தப்பட்டனர்.
இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவருடைய குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அச்சம் காரணமாக அவர்கள் இங்கு உரையாற்றுவதற்கு வரவில்லை.
இவ்வாறு அச்சம் காரணமாக அனேகமானோர் மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குறித்து அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புக் கூறும் வகையில் சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு, ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இன்று (05) உரையாற்றிய மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார்.
http://www.saritham.com/?p=52915
No comments:
Post a Comment