Translate

Friday, 16 March 2012

போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைக்கு, பிரித்தானியா மீண்டும் வலியுறுத்து


போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சனல் 4 ன் “சிறிலங்காவின் கொலைக்களங்கள்- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” ஆவணப்படம் முலம் மேலும் பல போர்க்குற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இறுதிப்போரில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்கு ஆதரவாக, முக்கியமான சாட்சியங்களை அனைத்துலக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக சமூகத்தின் கோரிக்கைகளுக்கிணங்க, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகரமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். எனச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்,
சிறிலங்காவில் நீதி, நல்லிணக்கம் மற்றும் அரசியல் முன்னேற்றங்களை உறுதி செய்யும் இந்த நகர்வுகளில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். என அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment