தமிழீழ விடுதலையை வென்று எடுக்க எம்மினம் தவிர்ந்த எதுகும் இனி தடை இல்லை!-மலர்


யுத்தத்தினால் நாட்டினை பாழாக்கிய அரசியல் சர்வாதிகாரிகள், தற்போது வெவ்வேறு தோற்றங்களில் நாட்டை பாழாக்கி வருவதாக குறிப்பிட்டுள்ள அரசியல் வாதிகள் புரிந்தது போல் கூட நாம் எமது விடுதலைக்கான நகர்வை பொறுப்போடு உணரவில்லை. காரணம் இந்தியாவின் பாதுகாபபுடன் அரசியல் போர் என்பது மறுக்க முடியாத இன அழிப்பு! ஆனால் அத்தனைக்கும் இந்தியா காரணமாக இருந்தது என்பதற்கு அப்பால் தற்போதைய சந்தற்பங்களை தமிழினம் பயன்படுத்த வேண்டிய தேவையும் கடந்த கால தவறுகளும் நிறைய உண்டு.
அதன் அடிப்படையில் செயல்பட வேண்டிய தேவைகளுக்கு தடையாக இருப்பது யார்? என்றால் அதற்கு தமிழினம் பதில் தேடப்பட வேணடும். காரணங்களை உள்வாங்காமல் அத்தனைபேரும் எதிரிகள், துரோகிகள் என்பவர்கள் தம்மில் இருக்கும் பிழைகளை திருத்திக் கொள்ள மறுப்பதற்கான காரணம் என்ன?.
அதாவது இந்தியா சர்வதேசத்தை ஒரு நகர்த்தலாக கொண்டு ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கு பதில் தேடப்பட வேண்டுமாயின் சர்வதேச புலம் பெயர் சமூகமாக வாழும் தமிழினம் தமக்கான ஒரு கட்டமைப்பினை உருவாக்கி அதற்கும் ஈழத்தில் ஈழவிடுதலையினை சர்வதேச சட்டத்திறகு உட்டபட்டு செயற்படுவது தமிழின விடுதலைக்கு முக்கிமான ஒனறு. காரணம் தமிழ் கூட்டமைப்பினை நம்பி ஒரு நிரநதர தீர்வை ஏற்படுத்த முடியாது.
காரணம் சிங்கள இனவாத அரசியலை மதிக்க வில்லை அயல்நாடு, இந்தியா தனது இருப்பை உறுதிசெய்துகொள்ள ஒருதீர்வை நடைமுறைப்படுத்தும் போது அதில் தமது பங்கை வகிக்கும் அளவு தமிழினத்தின் விடுதலை பேரம் பேசும் சொத்தாகவே வளர்கப்படும்போது, எதனை நம்பிக்கையாக கொண்டு இந்தியா இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பது? அதனை எதிரி சரியாக கையாள்வதற்கு நாம் எப்போதும் காரணமாக இருந்திருக்கினறோம். தற்போது உள்ள சந்தற்பத்தைக கூட தமது தவறுகளை உணர்ந்தது போல் தமது அரசியல் இழக்கப்படாமல் நகரத்த எதனையும் அவர்கள் இழக்க தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இனவிடுதலை ஒன்றோடு தமது வாழ்நாளையே வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பதே எம்மினத்தின் செயல்பாடு.
எம்மினம் எத்தனையோ வரலாறுகளாக வாழந்த ஈழமண்ணில் தற்போதும் எமது விடுதலையின் நகர்வு தோற்காமல் அதற்கான ஊந்து சக்திகளே இவற்றிற்கான காரணம் என்றால் நா.க.த.அரசாங்கத்தை ஒன்றுபட்டுவளர்த்து அதன் மூலம் இந்தியா உட்பட்ட சர்வதேச நாடுகளின் அணுகு முறையில் ஈழவிடுதலையின் எதிர்காலத்தை அடைய எம்மினம் தவிர்ந்த எதுகும் இனி தடை இல்லை என்பதே எதிர்கால உண்மை ஆகும்.
காரணம் ஐ.நா தீர்மானமும் சனல் 4 தொலைக்காட் செய்திகளை பயன்படுத்துவதில் முன்னேற்றம் காணும் விடயஙகளை கைவிட்டு எதிர்பார்போடு காலத்தை கழித்து எதனையும் சாதிக்க முடியாது. அதனால் அதை எல்லாம் செய்தோம் எமது விடுதலை வெற்றி பெறவில்லை என்பது எமது அறியாமையும் சேர்ந்து பயணிப்பதால் முள்ளிவாய்காலின் முடிவில் அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்த வேண்டியதனை செயற்பாட்டாலும். அதனை வழிநடத்த ஒற்றுமை அன்றி நடப்பதற்கு அடிப்படை மக்கள் காரணம் அல்ல. அதனால் இந்தியா சர்வதேசம் இலங்கை அரசாங்கம் என்ற பாகுபாடுஅற்று எமது எதிர்கால விடுதலைப் பாதையினை சரியாக நகர்தப்படுவதில் தான் எதிர்காலம் தங்கி உள்ளது.

நன்றி.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
-மலர்
No comments:
Post a Comment