Translate

Friday, 16 March 2012

சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" முழுமையான காணோளி:




மனித உரிமைமீறல்களை விமர்சனம் செய்வோரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம்


மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குரல் கொடுக்கும் தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளுன் ஆதரவாளர்களாக சித்தரிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சனம் செய்வோரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பும் தரப்பினரை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக வர்ணிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை கவனத்திற் கொள்ள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதனையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான பேரவையின் தீர்மானம் வலியுறுத்தி நிற்பதாகத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான பேரவை மேலும் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment