
இந்தியாவிற்கான உயர்ஸ்தானிகரை இலங்கை அரசாங்கம் உடனடியாக மீள அழைத்துக் கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை மீள அழைத்துக் கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமெனவும் பிரசாத் காரியவசம் கோரியிருந்தார்.
உயர்ஸ்தானிகரின் கருத்தானது இந்திய உள்விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை, அதனால் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து உரிய கவனம் செலுத்த வேண்டுமென மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment