Translate

Friday, 16 March 2012

பாலச்சந்திரன் படுகொலை- மழுப்புகிறார் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படைகளால் நீதிக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சனல்-4 ஆவணப்படம் சுமத்தும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிராகரிக்கவில்லை. 

இது தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்று சிறிலங்கா அதிபரின் அனைத்துலக ஊடக ஆலோசகரும், அவரது பேச்சாளருமாக பந்துல ஜெயசேகரவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு அவர், தாம் இன்னமும் அந்த காணொலிப் பதிவைப் பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.
“உலகம் முழுவதிலும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அந்த காணொலியைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்கு இழிவை ஏற்படுத்துவதில் மும்முரமாக இருக்கின்றனர்.
சனல்-4 வெளியிட்ட முதலாவது காணொலியை நாம் ஒவ்வொரு கட்டமாக ஆராய்ந்து பார்த்தோம்.
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் பெண்கள் பற்றிய ஆயிரக்கணக்கான காணொலிகளை எம்மால் தயார்படுத்த முடியும்.
அவர்கள் சிறுவர்களைக் கொலை செய்ததை எம்மால் உறுதி செய்ய முடியும். சிறிலங்காப் படைகள் இவற்றில் ஈடுபடவில்லை. நாம் மேற்கொண்டது மனிதாபிமானப் போரைத் தான்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக- ஒளிப்பட ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம் அது பற்றிய எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment