வடபகுதி தண்ணீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு
வடபகுதியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டையினை நிவர்த்தி செய்வதற்காக மொரகஹகந்தயில் இருந்து புதிய கால்வாய் கட்டமைப்பு ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் திர்மானித்துள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுமார் 125 கிலோமீற்றர் தூரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கால்வாய் கட்டமைப்பு இலங்கையின் மீக நீண்ட கால்வாய் அமைப்பாக அமையவுள்ளது. இதனூடாக கிளிநொச்சி,வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீரை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த கால்வாய் பணிகளுக்கான திட்ட வரைபடத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இருபக்க கொங்கிரீட் மதில்களை கொண்டதாக இது நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் மூலம் புதிய விவசாய வலயமொன்றிற்கான நீர் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது
.
.
No comments:
Post a Comment