Translate

Monday 12 March 2012

ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறி


ஜெனிவாவில் இன்னும் காத்திருக்கிறது பொறி
essayஜெனிவா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் ஆரம்பமாகிவிட்டது. இந்த கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தாம் ஆதரவு வழங்க போவதாக அமெரிக்க ஏற்கனவே அறிவித்துவிட்டது. தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா முதலில் இலங்கை அரசிடமே அறிவித்தது.


 ஜெனிவா மனித உரிமை பேரவையின் 19வது கூட்டத் தொடர் ஆரம்பமாகிவிட்டது.   இந்த கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தாம் ஆதரவு வழங்க போவதாக அமெரிக்க ஏற்கனவே அறிவித்துவிட்டது. தமது இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா முதலில் இலங்கை அரசிடமே அறிவித்தது.

 
 ஹிலரி கிளின்டன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு அனுப்பி கடிதம் மூலம் அமெரிக்கா இதனை அறிவித்திருந்தது. இதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் மரியோ ஒடாரோ மற்றும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஆகியோர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இரண்டாவது முறையாக அறிவித்தனர்.
 
 இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்த சந்தர்ப்பத்தில், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியோ, சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெலய உறுமயவோ, அமெரிக்க தூதரகத்துக்கு எதிரில் ஆர்ப்பாட்டங்களையோ, உண்ணாவிரதங்களையோ மேற்கொள்ளவில்லை. எனினும் அரசு அமெரிக்காவின் யோசனையை தோற்கடிக்கும் நோக்கில், பாரிய பிரசாரம் மற்றும் அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்தது. 
 
52 பேர் கொண்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு ஜெனிவா சென்றனர்.  இந்த குழுவில் வேறு நாடுகளில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை போன்ற அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
 
உண்மையில் அமெரிக்காவின் யோசனைக்கு ராஜபக்க்ஷ அரசு ஏன் இவ்வளவு அஞ்சி இவ்வாறு பதற்றமடைந்துள்ளது என்பதை உணர்ந்துக்கொள்ளவது கடினமானது. அமெரிக்காவின் யோசனையானது ஒரு அறிவிப்பை போன்றது என்பதே இதற்கான காரணமாகும். இந்த யோசனையானது இலங்கை அரசுக்கு எந்த கடப்பாடுகளை ஏற்படுத்தாத ஒன்று. வேறு வார்த்தையில் கூறுவதானால், அமெரிக்காவின் யோசனையானது இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் யோசனையாகும்.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத் தப்படுகிறதா என்பதை மனித உரிமை பேரவை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அமெரிக்காவின் யோசனையில் கோரிக்கை விடுக்கப்பட மாட்டாது.  அத்துடன் அந்த யோசனையில் போர் குற்றங்கள் தொடர் பிலோ, சர்வதேச விசாரணை குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.
 
அது மாத்திரமல்ல, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை சம்பந்தமாகவே எதுவும் காணப்படவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசெம்பர் மாதம் பகிரங்கப்படுத் தப்பட்டது. இலங்கையின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்கள் அனைத்து அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறே கோரிக்கை விடுத்தன. 
 
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்முன் வைக்க யோசனையிலும் இதுவே கோரப் பட்டுள்ளது.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் திட்டங்களை முன்வைக்குமாறும் அதனடிப்படையில் சர்வதேச மனித உரிமை மீறல்களை உடனடியாகவும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் விசாரணை நடத்துமாறும் அதற்கு தேவையான உதவியை மனித உரிமை பேரவை வழங்க வேண்டும் எனவும் யோசனையில் கூறப்பட்டுள்ளது.
 
 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் மிகவும் காரணங்களை சுட்டிக் காட்டும் சிறிய மற்றும் விவரமான விமர்சனங்களை முன்வைத்தது, தமிழ் மக்களின் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கையில் முற்றாக தவறான தோற்றப்பட்டை முன்வைத்துள்ள தாக கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
 
அத்துடன் இலங்கை ஆயுதப்படையினர் மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆணைக்குழுவின் அறிக்கை மூடிமறைத்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக எப்படி யான விசாரணை நடத்தப்பட்டாலும், அந்த விசாரணை அது பக்கசார்பற்றது மாத்திரமல் லது இலங்கை மக்கள் மத்தியில், நம்பிக்கையை வென்றெடுக்கும் விசாரணையாக இருப்பது மிகவும் முக்கியமானது.
 
 இலங்கையில் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பாக அரசியல் அர்ப்பணிப்பு தற்போது அரசுக்கு இருக்குமானால், யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அதனுடன் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். அவ்வாறின்றி, நாட்டின் தலைவரான ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துமாறு கொண்டு வரப்படும் யோசனையை எதிர்ப்பதன் மூலம் இலங்கை அரசு எதனை வெளிப்படுத்துகிறது?.
 
இரண்டு விடயங்கள்:
இதில் முதலாது நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் செயற்படுத்த அரசுக்கு விருப்பமில்லை அல்லது இயலாமை ஆகும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால், யுத்ததிற்கு பின்னரான இராணுவமயப் படுத்தல், குடும்ப அரசியல் திட்டங்கள் அனைத்து இல்லாமல் போய்விடும். இதனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சீரழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
உதாரணமாக, வடக்கில் இராணுவமயப் படுத்த நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை ஆணைக்குழு முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்கனவே ராஜபக்ஷ அரசு குப்பைக் கூடையில் எறிந்து விட்டது. வடக்கில் எந்த இராணுவயமப் படுத்தலும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளதன் மூலம் இது புலப்பட்டுள்ளது. மற்றுமொரு பரிந்துரை இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட வேண்டும் என்பதாகும். 
 
சுதந்திரத்தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாட இடமளிக்காததன் மூலம் ஜனாதிபதியே அந்த பரிந்துரையை குப்பையில் எறிந்து விட்டார் என இன்னுமொரு உதாரணமாகும்.
 
மேலும் சனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ சம்பந்தமாகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது. இதற்கு பதிலாக ராஜபக்ஷ அரசு இராணுவ விசாரணை ஒன்றை ஆரம்பித்தனர். இது போதாதென்று, ஆணைக்குழுவின் அறிக்கையில் துணை ராணுவத்தினரை வழி நடத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட ஜெனிவா பிரதிநிதிகள் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளார். 
 
 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் வழமைக்கு திரும்புவதற்கு பதிலாக, அடையாளம் தெரியாத சடலங்கள் அங்கங்ககே மீட்கப்படு வதுடன், காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் மக்கள் கூட்டங்கள் மீதும், கருத்துச் சுதந்திரம் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படுகிறன. 
 
இதடினப்படையில் பார்க்கும் போது, இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கோரும் யோசனை நிறைவேற்றப்படுவது தமக்கு ஏற்படும் மரண ஆபத்து என ராஜபக்ஷ  நிர்வாகம் தீர்மானித்துள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வது சிரமமான காரியமல்ல.
 
தம்மால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அரச தலைவர் ஒருவர் அஞ்ச நேர்ந்த யுகம் ஒன்றும் இன்னும் இருக்கின்றதா?.  
இந்த அச்சத்தின் அடிப்படையிலேயே இரண்டாவது காரணம் எழுகிறது. சர்வதேச மட்டத்தில் மனித உரிமை மீறல் தொடர்பில் தோல்வியை சந்திப்பது தாங்கிக்கொள்ள முடியாத அனர்த்தம் என்ற உணர்வாகும். 
 
சுருக்கமாக சொன்னால்: நாட்டின் ஜனநாயகம், மக்களின் மனித உரிமைகளை விட, அதிகாரத்தில் இருப்பது அவசியமாகி போனால், ஜனநாயகம், மனித உரிமை குறித்து பேசுவது மரண பொறியாகவே தெரியும். அப்போது, அடக்குமுறையை தவிர வேறு வழிமுறைகள் இல்லை. அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழ்வர்.
 
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இம்முறை ஜெனிவாவில் கொண்டு வரப்படும் பிரேரணையிலிருந்து இலங்கை அரசு மீள்வது என்பது இலகுவான விடயம் அல்ல. ஏற்கனவே சிரியாவுக்கு எதிரான பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டு விட்டது. அடுத்த இலக்கு இலங்கைதான். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அது எடுக்கும் எந்த முயற்சியும் இலகுவில் தோல்வி கண்டதாக இல்லை.
 
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்ற கொள்கையிலேயே அமெரிக்கா இப்போதும் வியூகம் வகுத்துச் செயற்பட்டு வருகிறது. சதாம் ஹுசைன், ஒசாமா பின்லேடன், மும்மர் கடாபி ஆகியோரின் வீழ்ச்சிக்காக நீண்ட நாள் காத்திருந்து பொறி வைத்ததும் இந்த அமெரிக்காதான். அப்படியான ஒரு அசட்டுப் பலம்கொண்ட அமெரிக்கா இப்போது இலங்கைக்கு எதிராகத் தூக்கியிருக்கும் பிரேரணையும் இலகுவில் தோற்கடிக்க முடியாதது என்றே எண்ணத் தோன்றுகின் றது. காரணம் அதற்கான முன்னாயத்தங் களை  இராஜதந்திர அணுகுமுறைகளை ஏற்கனவே மேற்கொள்ளாமல் அது ஒருபோதும் இந்த முயற்சியில் இறங்கியிருக்கவேமாட்டாது. ஒட்டு மொத்தத்தில் இந்தக் கூட்டத் தொடர் இலங்கை அரசுக்கு ஆப்புத்தான்.

No comments:

Post a Comment