Translate

Monday, 19 March 2012

நாமல் ராஜபக்க்ஷவுக்கு இந்திய அரசின் விருது; கொதிப்படையும் தமிழர்கள்..


நாமல் ராஜபக்க்ஷவுக்கு இந்திய அரசின் விருது; கொதிப்படையும் தமிழர்கள்..
இந்தியாவைத் தற்போது ஆட்சி செய்து வரும் அரசு ஈழத் தமிழர்கள் மீது ஏதோவொரு காரணத்துக்காக தனது வெறுப்புத் தன்மையைக் காட்டி வருகின்றது. அந்த வெறுப்பின் உச்சக்கட்டத்தினை நாம் வன்னிப் பெருநிலப்பரப்பில் காணக் கூடியதாக இருந்தது. 

ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்று திரண்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் கூட இந்திய மத்திய அரசின் வெறுப்பைக் கரைய வைக்க முடியாதுபோய்விட்டது.

தற்போது இந்திய அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள வெறுப்பு இறுதி யுத்தத்தின் முடிவுடன் நிறுத்தப்பட்டு விட்டதா? அல்லது தொடர்கிறதா? என்ற கேள்விகளுக்குப் பதில் என்ன என்றால், அது இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்திய அரசின் நிலைப்பாடாகவேயிருக்கும்.

இத்தனை விடயங்களும் ஒருபுறம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்ததாக அனைத்துலக சமூகத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் மகனான நாமல் ராஜபக்க்ஷவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதுடன் இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக அறிவித்துள்ளது.

எப்படியிருக்கின்றது நிலைமை? தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களும், பல கட்சித் தலைவர்களும் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் திரண்டெழுந்துள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அமைதியாக அனுமதியளிதாகவே அமைந்துள்ளது மத்திய அரசின் செயற்பாடு. இந்த விருதினை டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில் சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம்.

எனவே இதிலிருந்து ஈழத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது நன்றாகப் புலனாகின்றது. இதேநேரம் இனிவரும் காலங்களில் மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் சிறந்த மனிதாபிமானி என்ற விருது இந்திய மத்திய அரசால் வழங்கப்பட்டாலும் ஆச்சரிப்படுவதற்கு இல்லை.

அந்தளவுக்கு இரு அரசின் நெருக்கமான உறவுகள், நடவடிக்கைகள் அத்தனையும் நோக்கும் போது, ஏதோவொரு விதத்தில் ஈழத் தமிழர்களை அழித்து அல்லது அவர்களின் பலத்தைக் குறைத்து அதில் சுயஇலாபம் ஈட்டும் நோக்கம் கொண்டவையாக அமைந்துள்ளது.

போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் மகனுக்கு இந்திய அரசின் ஆதரவோடு சிறந்த சர்வதேச இளைஞன் விருது வழங்குவது எத்தனை குரூரமான சிந்தனை என தமிழுணர்வாளர்கள் கொதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment