ஐ.நா கூட்டத் தொடர் : தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஈடுபட்டு வருகின்றது!
ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட, தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நா.தஅரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைச் சபையிலும், பலலவேறு நாடுகளிலும் தொடர்சியான இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்களில், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலல் தகவல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
பெப்பரவரி 20ம் நாள் முதல் ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாட்டு இராஜதந்திரகளுடன் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்ட "We Accuse War Crimes and Genocide" எனும் கையேடு, ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு கையளிக்கப்பட்டிருப்பதோடு, ஐ.நா மனித உரிமைச் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகளுக்கு சேரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதேவேளை, இக்கையேடு ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்கெடுத்திருக்கும் அனைத்து பிரதிநிதிகளின் கவனத்தை பெறும் வண்ணம் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைச் சபையில் தொடர்சியான சந்திப்புக்களில் நா.த.அரசாங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில், பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டு அமைச்சுக்களுடனும், தூதரங்களுடனும் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சத்தில் சமீபத்தில் சந்திப் பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சகத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் Markus Löning மற்றும் செயலர் Felix Schwarz ஆகியோருடன், நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஜேர்மனிய செயலர் வாசுகி தங்கராஜா ஆகியோருக்கும் இடையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

No comments:
Post a Comment