தமிழக உறவுகளே இந்தியா வழங்கிய பணத்தில் தமிழனுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை. மாறாக தமிழனை கொன்றொழித்த சிங்கள படைச் சிப்பாய்களுக்கு பரிசாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன.
(இதனை உங்களுக்கு சொல்லியும் எந்த பலனும் இல்லை. ஏனெனில் நீங்கள் ஊமைகள், செயலாற்றல் அற்றவர்கள், இதனை தடுக்க உங்களால் என்ன செய்துவிட முடியும்….?
ஆக மிஞ்சி மிஞ்சி போனால் ஓர் கண்டன அறிக்கை இல்லை என்றால் நூறு பேர் சேர்ந்து ஆர்ப்பாட்டம். உறவுகளே நாங்கள் தற்போது கையாலாகாத நிலையில் உள்ளோம். வாயைத்திறந்த அடுத்த வினாடி வெள்ளைவான் வீட்டின் முன் நிற்கும் இல்லை மறுநாள் தற்கொலை செய்து கொண்டதாக கிணற்றில் மிதப்போம். உங்கள் நிலைமை அப்படியில்லை…. நீங்கள் எங்களுக்காக ஏதாவது செய்யலாமே….?)
உண்மையை சொல்கின்றோம் உறவுகளே எமக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையை கண்டும் பூரிப்படையும் நாங்கள் அவை காரமாக இல்லை என்பதை கண்டு விரக்தி அடைகின்றோம். நீங்கள் கட்சி ரீதியில் பிளவுபட்டுக் கிடக்கின்றீர்கள். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவகை போராட்டம்.
ஏன் நீங்கள் எமக்காக ஒரு தடவை ஒன்றிணைய கூடாது. இந்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்புகளை துண்டிக்க வேண்டும். இலங்கை பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட கூடாது, இலங்கை உயர்ஸ்தானிகராலயங்கள் இந்தியாவில் இயங்க கூடாது. என இந்திய அரசை வலியுறுத்தலாமே. நீங்கள் ஒற்றுமையாக செயற்பட்டு பாருங்கள்.
ஓரு வாரம் ஏன் ஒரு நாள் இந்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தையும் இயங்கவிடாது முடக்குங்கள். காவல்துறையையும் சேர்த்துத்தான். இந்திய அரசு ஒருகணம் சிந்திக்கும். மறுபடி போராட்டம் என்று கூறிப்பாருங்கள் பேசித்தீர்க்கலாம் வா என்பார்கள்.
நீங்கள் போராட்டம் ஆரம்பித்தால் காவல்துறை கைது செய்கிறது. காவல்துறை கைது செய்யும் போது சிதறி ஓட வேண்டாமா அல்லது உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டாமா. நீங்கள் என்ன செய்கின்றீர்கள் போலீஸ் அராஐகம் ஒளிக என கோஷம் போட்டபடி காவல்துறை வாகனத்தில் ஏறுகின்றீர்கள். அப்போது ஊடகங்களுக்கு உங்கள் கைகளால் வெற்றிச்சின்னம் காட்டுகின்றீர்கள் அல்லது போய் வருகின்றேன் என கை அசைக்கின்றீர்கள்.
நீங்கள் கைதாவது மறுநாள் செய்தியாக வருகின்றது. இதுவா உங்கள் சாதனை. நீங்கள் செய்த போராட்டத்தின் பலன் உங்கள் கைது. போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏதாவது செய்யுங்கள் உறவுகளே. நீங்கள் எமக்கு செய்தவை அல்லது செய்பவை பற்றி நாம் மறக்கவில்லை. அவற்றைப் பற்றி குறை கூற நாம் யார் என நீங்கள் நினைக்கலாம். எமக்காக குரல்கொடுக்கும் உங்களிடமே உரிமையுடன் எமது வேண்டுதல்களை முன் வைக்க முடியும்.
எமது ஓரே கோரிக்கை இது தான் உறவுகளே – இந்தியா இலங்கைக்கு சார்பாக இருக்கும் வரை வேறு எந்த நாடும் ஈழத்தமிழர்களுக்கு உதவப் போவதில்லை. ஆகவே இந்திய அரசு இலங்கைக்கு வழங்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும். இதனை செயன்முறைப்படுத்த உங்களால் தான் முடியும் உறவுகளே. எமக்காக ஏதாவது செய்யுங்கள்….

No comments:
Post a Comment