Translate

Monday, 19 March 2012

சந்தியா எக்னலியகொட ஐ.நாவில் உரையாற்றவுள்ளார்? _


  காணாமல் போன ஊடகவியலாளரான பிரகீத் எக்னலியகொடவின் மனைவி சந்தியா ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையிலிருந்து திடீர் பேச்சாளரொருவர் இன்று உரையாற்றுவார் என சர்வதேச மன்னிப்புச் சபையினால் அறிவிக்கப்பட்டதாகவும் அது சந்தியா எக்னலியகொடவாக இருக்கலாம் என இலங்கைத் தரப்பு நம்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி பிரகீத் காணாமல் போனதுடன் அவர் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment