Translate

Monday, 19 March 2012

பிரதமர் விளக்கத்தில் தெளிவு இல்லை: அதிமுக அதிருப்தி


புதுடெல்லி: ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்‍கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து பிரதமர் தெளிவாக விளக்கமளிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அதிமுக தெரிவித்துள்ளது. 



மக்‍களவையில் ஜனாதிபதி உரை மீதான வாதத்துக்‍கு பதிலளித்து இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், "ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்‍கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு விவரம் இன்னும் கிடைக்கவில்லை.

அந்தத் தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுக்கான சம உரிமை, நீதி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களது நலனுக்கும் எதிர்காலத்துக்கும் ஆதரவான அம்சங்கள் இருக்கும் பட்சத்தில், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும்," என்றார் மன்மோகன் சிங்.

ஆனால், இலங்கை அரசுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள போர் குற்றம் குறித்து இந்தியாவின் நிலையை அவர் விளக்கவில்லை என்று அதிமுக எம்.பி.கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஆதரிக்கப்படும் என்ற பிரதமரின் பதில் மேலோட்டமாக இருப்பதாகவும், இலங்கைக்கு எதிரான போர்குற்றம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தவில்லை என்றும் அதிமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.

No comments:

Post a Comment