Translate

Tuesday, 6 March 2012

கொழும்பில் இனக்கலவரத்தைத் தூண்ட சில சக்திகள் முற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.

கொழும்பில் இனக்கலவரத்தைத் தூண்ட சில சக்திகள் முற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிறுத்தி கொழும்பில் இனக்கலவரத்தை தூண்ட சில சக்திகள் முற்படுவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பான அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். 


இன்று முற்பகல் அவரது அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக காண்பிப்பதற்கு முற்படும் தீய சக்திகளை இனம் காண வேண்டுமென வலியுறுத்தினார். 

படிப்பினைகள் ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லையெனவும், அவற்றை நடைமுறைப்படுத்தினால் இனக்கலவரம் ஏற்படுமென சில அரசியல்வாதிகள் கூறுவதை ஏற்க முடியாதெனவும் கூறினார். 

இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமெனவும், தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்ட அமைச்சர், இதனைப் புரிந்து கொள்ள மறுக்கும் சில இனவாதிகள் நாட்டுப்பற்று என்ற போர்வையில் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். அரசுக்கு ஆதரவு வழங்கும் சில கட்சிகளும் இனவாதம் பேசுவதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டினார். ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகளை விமர்சிப்பதால் இலங்கையின் இறைமையை காப்பாற்றிவிட முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://thamilfm.com/...l.aspx?ID=11304

No comments:

Post a Comment