
மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை விரும்பி நிற்பதாக ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சில மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை மட்டுமே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்களினால் தமது சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியாத நிiயில், அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு என்ற அடிப்படையில் அமெரிக்கா உலக நாடுகளில் தலையீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதற்காக அமெரிக்கா போன்ற நாடுகள் பல்வேறு காரணங்களை முன்வைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களை அரசாங்கம் பாதுகாக்க தவறிவிட்டதாக வெளிக்காட்ட சில மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
லிபியா, ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் இவ்வாறுமேற்குலக நாடுகள் தலையீடு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment