Translate

Monday, 19 March 2012

மகிந்தவின் விசுவாசியான சுகி சிவத்தின் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது

மக்களின் எதிர்ப்பால் இரத்துச்செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம் சிங்கள அடிவருடிகளான எல்லாத் தமிழருக்கும் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.  


தமிழகத்து ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிங்கள போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்‌ஷவின் நண்பருமான சுகி சிவம் அவுஸ்த்திரேலிய நகரங்களான பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் நடத்துவதாகவிருந்த நிக்ழச்சிகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இதனை ஒழுங்குசெய்த அமைப்பினர் அவசர மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியிருக்கின்றனர்.


தனது அண்மைய யாழ்ப்பாண விஜயமொன்றினை சிங்களப் போர்க்குற்றவளிகளை நியாயப்படுத்தவும், போர்க்குற்றங்களை மறக்கும்படி தமிழர்களைக் கேட்கவும் பயன்படுத்திய இந்த சொற்பொழிவாளரின் செயலால் கொதிப்படைந்த புலம்பெயர் தமிழர்கள் இவரது நிகழ்ழ்சி பற்றி மிகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததோடு நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் இதுபற்றி அறியத் தந்திருந்தனர். 

No comments:

Post a Comment