Translate

Wednesday, 14 March 2012

மனித உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்த நிலைபாட்டை இந்தியா தெரிவிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் திருமாவளவன் தர்ணா


புதுடெல்லி,மார்ச்.13: மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என கூறுவது தமிழ் இனத்தை மேலும் ஏமாற்றும் செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மனித உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீது இம் மாத இறுதியில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்த நிலைபாட்டை இந்தியா தெரிவிக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய திருமாவளவன் தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என குரல் எழுந்து வரும் வேளையில் மற்ற நாட்டு விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்று கூறுவதை கண்டிப்பதாக தெரிவித்தார். 

No comments:

Post a Comment