ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், நோர்வே, கனடா , பெல்ஜியம், அவுஸ்றேலியா , பிரித்தானியா, அயர்லாந்து ஆகியன சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய இறுக்கமான நிலைப்பாட்டினை முன்வைத்தன.
இதேவேளை சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பும் சிறிலங்கா தொடர்பில் தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இந்த விவாதத்தில், சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
மனித குலத்தின் தேசிய இனத்துவ, சமய மற்றும் மொழி ஆகியனவற்றின் உரிமைகள் குறித்தான ஐ.நா பிரகடனம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றிருந்தது.
அமர்வில் பங்கெடுத்திருந்த 40 நாடுகளில் European Union, Pakistan on behalf of the Organization of Islamic Cooperation, Austria, Italy, China, Russian Federation, Hungary, Kuwait, Malaysia, Costa Rica, Angola, United States, Iran, Azerbaijan, Nepal, Slovenia, Ethiopia, Honduras, Romania, Greece, Ecuador, Norway, Latvia, Sri Lanka, Morocco, India ஆகிய நாடுகள் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தன.
American Association of Jurists; France Libertés; International Youth and Student Movement for the United Nations; Society for Threatened People; Canadian HIV/AIDS Legal Network; Human Rights House Foundation; Ligue internationale contre le racisme et l’antiracisme et l’antisémitisme; Asian Legal Resource Centre; Nonviolent Radical Party, Transnational and Transparty; Helsinki Foundation for Human Rights; International Movement Against all Forms of Discrimination and Racism; Asian Indigenous and Tribal Peoples Network; Centrist Democratic International; Regional Centre for Human Rights and Gender Justice “Corporacion Humanas”; Reporters Without Borders International; Physicians for Human Rights; Democracy Coalition Project; Lawyer’s Rights Watch Canada; Islamic Human Rights Commission; International Commission of Jurists; Freedom House; Organisation pour la Communication en Afrique et de Promotion de la Cooperation Economique Internationale; Human Rights Watch; World Alliance for Citizen Participation; Organization for Defending Victims of Violence; Union of Arab Jurists; Jubilee Campaign; International Islamic Federation of Student Organizations; Rencontre Africaine pour la Defense des Droits de l’Homme; Iranian Elite Research Centre; and the United Nations Watch. ஆகிய தன்னார்வ, அரச சாhப்பற்ற, மனித உரிமைகளுக்கான அமைப்புகளும் பங்கெடுத்திருந்தன.
இலங்கை, இந்தியா, மலேசியா உட்பட பல நாடுகளில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான உரிமைகள் குறித்து விவாதம் இருந்தது.
இதில் சிறிலங்கா தொடர்பில் பேசப்பட்டுள்ள விடயங்களாக….இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வினை வலியுறுத்தி பேசிய கனடா, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படல் வேண்டும் என தெரிவித்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவானது, போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக்கூறத் தவறிவிட்டதோடு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினையும் கவனிக்க தவறிவிட்டது என கனடா குற்றஞ்சாட்டியது. சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக, இலங்கைத்தீவில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணையின் அவசியத்தையும் கனடா மீண்டும் ஒருதடவை அமர்வில் இறுக்கமாக தெரிவித்தது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பிலான விவாதத்துக்கு ஆதரவு தனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்த பிரித்தானியா, சிறிலங்காவின் நல்லிணக் க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
காணமல் போதல், ஊடக சுதந்திரம் குறித்தும் தனது கவலையைத் தெரிவித்த பிரித்தானியா, மனித உரிமைகள் தொடர்பில் காத்திரமான செயற்பாடுகளுக்கு, சிறிலங்கா உடனடியாக பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.
சிறிலங்கவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை வரவேற்றுக் கொள்கின்றோம் என தெரிவித்த அயர்லாந்து, ஐ.நாவுடன் இணைந்த கூட்டுச் செயற்பாட்டுடன் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா செயலாற்ற வேண்டுமென சுருக்கமாக முடித்துக் கொண்டது.
இலங்கைத்தீவில் நடந்தேறிய சர்வதேச சட்டமீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ,சிறிலங்கா காலதாமதமின்றி பதிலளிக்க வேண்டும்என தெரிவித்த நோர்வே, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படல்வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதேவேளை, ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையினை தாம் ஆதரிக்கப் போவதாகவும் நோர்வே தெரிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கருத்துரைத்த டென்மாக் பிரதிநிதி, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையுடன் இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் வலியுறுத்தினார். இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த, மனிதஉரிமைகள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல், பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு பதிலளித்தல் அவசியம் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறே பிரான்ஸ், அவுஸ்றேலியா ஆகியனவும், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை; நடைமுறைப்படுத்துவற்கான அவசியத்தை வலியுறுத்தி நின்றன. தொடர்ந்து கருத்தினை வெளியிட்ட சர்வதேச நீதியாளர் ஆணையம் ICJ எனும் அமைப்பு, சிறிலங்கா தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
வார்த்தைகள் வேண்டாம் இங்கு செயல்தான் முக்கியம் என சிறிலங்காவுக்கு கடும் தொனியில் வெளிப்படுத்திய ICJ ,1977ம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசானது பல ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளது என குற்றஞ்சாட்டியது. காலவிரயம், திட்டங்கள், வரைகள் யாவும் கடந்துவிட்ட நிலையில், சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பொறிப்பிருக்கின்றது என தெரிவித்த ICJ , சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்று, சிறிலங்கா தொடர்பில் அவசியம் என வலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், சர்வதச சட்டங்கள் ஆகியனவற்றுக்கு புறம்பாக, சிறிலங்காவில் இடம்பெற்று வரும் சட்டத்தக்கு புறம்பான கொலைகள் , அச்சுறுத்தல்கள் ,பிற குற்றங்கள் குறித்து தனது கடுமையான கண்டனத்தை ICJ தெரிவித்தது.
வார்த்தைகள் வேண்டாம் இங்கு செயல்தான் முக்கியம் என சிறிலங்காவுக்கு கடும் தொனியில் வெளிப்படுத்திய ICJ ,1977ம் ஆண்டு முதல் சிறிலங்கா அரசானது பல ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளது என குற்றஞ்சாட்டியது. காலவிரயம், திட்டங்கள், வரைகள் யாவும் கடந்துவிட்ட நிலையில், சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு பொறிப்பிருக்கின்றது என தெரிவித்த ICJ , சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்று, சிறிலங்கா தொடர்பில் அவசியம் என வலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், சர்வதச சட்டங்கள் ஆகியனவற்றுக்கு புறம்பாக, சிறிலங்காவில் இடம்பெற்று வரும் சட்டத்தக்கு புறம்பான கொலைகள் , அச்சுறுத்தல்கள் ,பிற குற்றங்கள் குறித்து தனது கடுமையான கண்டனத்தை ICJ தெரிவித்தது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது, கடந்த மூன்றாண்டுகளில் பொறுப்புகூறலில் இருந் தவறிவிட்டது என குற்றஞ்சாட்டிய ICJ , சிறிலங்கா தொடர்பிலான பிரேரணைக்கு நாடுகளின் ஆதரவின் அவசியத்தை வலியுறுத்தியது.
மேலும் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையானது, சிறிலங்கா தொடர்பில் முதல்படியெனவும் ICJ தெரிவித்தது.
இவ்வாறு, பன்முனைகளிலும் இருந்து ஏவப்பட்ட கருத்துக்களுக்கு பதிலுரைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் உள்நாட்டு விவாரங்களில் வெளியாரின் தலையீடு அவசியம் இல்லை என தெரிவித்த சிறிலங்கா, உள்நாட்டு விவகாரத்தை, உள்நாட்டிலேயே தாங்கள் தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்தது.
Canada – EU – Ireland – UK :http://www.youtube.com/watch?v=mf7pOG4lbnc&list=UU5FJYFVgMQ2nTU6L9QdM7rg&index=1&feature=plcp
http://youtu.be/mf7pOG4lbnc
http://youtu.be/mf7pOG4lbnc
No comments:
Post a Comment