Translate

Wednesday, 14 March 2012

மன்மோகன் சிங்கின் பதிலில் திருப்தி இல்லை- ஜெயலலிதா!


இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய தலைமை அமைச்சரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை விவகாரத்தில் மன்மோகன் சிங்கிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது என்று கூறிய ஜெயலலிதா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றார்.
பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தொடர்ந்து அ.தி.மு.க ஆதரிக்கும் என்றும் ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment