Translate

Tuesday, 1 May 2012

14 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது சாகும்வரை உண்ணாவிரதம் அகதிகள் கைவிட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு


14 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது சாகும்வரை உண்ணாவிரதம் அகதிகள் கைவிட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு



செங்கல்பட்டு:செங்கல்பட்டு அகதிகள் முகாமில் மயக்கம்போட்டு விழுந்த 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, 14 நாளாக நடந்து வந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இலங்கையில் இருந்து முறையான ஆவணம் இல்லாமல் இந்தியாவுக்கு வந்தது உட்பட பல்வேறு குற்றங்களின்பேரில் இலங்கை தமிழர்கள் மற்றும் அகதிகள் என 32 பேர் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல மாதங்களாக தங்கியுள்ள நிலையில், 14 பேர் தங்களை முகாமில் இருந்து விடுதலை செய்து, திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினர். இதன்படி, கடந்த 16ம்தேதி முதல் போராட்டம் தொடங்கியது.
இந்த போராட்டத்தை கைவிடுமாறு செங்கல்பட்டு ஆர்டிஓ செல்லப்பா, தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனால் உண்ணாவிரதம் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்த அருக்குள சிங்கம், சுதர்சன், சேகர், நாகராஜா, சதீஷ்குமார், செந்தூரான், சிவகுமார், பராபரன், ஜெகன், மதன், சுதாகர், சதீஷ் உள்ளிட்ட 12 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவர்கள் தவிர 2 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களுடன் மற்ற அகதிகளான அலெக்ஸ், அன்பு, கணேசலிங்கம், சிவா என மேலும் 4 பேர் இணைந்தனர். இதனால், மருத்துவமனைக்கு சென்றவர்கள் போக 6 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
இதனிடையே, செங்கல்பட்டு ஆர்டிஓ செல்லப்பா, தாசில்தார் வெங்கடேசன், கியூபிரிவு போலீஸ் டிஎஸ்பி பாண்டியன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘வரும் ஜூன் 15ம்தேதிக்குள் 15 பேர் திறந்தவெளி முகாமுக்கு மாற்றப்படுவார்கள். மற்றவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்’ என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகதிகளுக்கு பழரசம் கொடுத்து ஆர்டிஓ உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment