வடக்கு கிழக்கு மாகாணங்களில் 13 வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொள்ளுமாறு கோரி தமிழகத்தை சேர்ந்த 4 இந்திய மக்களவை உறுப்பினர்கள், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
சுதர்சனன்நாச்சியப்பன், எம்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 4 மக்களவை உறுப்பினர்கள் இந்த மகஜரை கையளித்துயள்ளனர். அத்துடன் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அதியுயர் பாதுகாப்பு வலையங்களை வட பகுதி மீனவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர். இதனை தவிர தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களை வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மக்களவை உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment