இந்தியா இலங்கையுடன் வைத்திருக்கும் உறவின் காரணமாகத்தான் 40ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் கொன்று குவித்து வருகின்றனர் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவா இந்திய மக்களவையில் பேசும் போது தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா உரையாற்றிய பின் அவரின் உரையை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவா உரையாற்றினார்.
வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சபையில் சமர்ப்பித்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் அறிக்கையே தவிர அது இந்தியாவின் அறிக்கை அல்ல என்றும், சிறிலங்கா கொடுக்கும் அறிக்கைகயையே இந்திய மக்களவையில் வெளிவிவகார அமைச்சர் வாசித்து வருகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
சிறிலங்காவுடனான உறவு வரலாற்றுப் பூர்வமானது, நட்பு ரீதியானது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படியே நீங்கள் கூறிக் கொண்டிருந்தால், இலங்கையில் இந்தியாவுக்கு ஆதரவான அத்தனை தமிழர்களும் கொன்று குவிக்கப்பட்டு விடுவார்கள்.
பல காலமாக எங்களது சகோதரர்களை கொன்று குவித்து வரும் ஒரு நாட்டுடன் நாம் எப்படி வரலாற்றுப் பூர்வமான உறவை பராமரிக்க முடியும், நட்பாக இருக்க முடியும். எனவே இனியும் அப்படிச் சொல்லாதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தெரிவித்தார்.
அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது அறிக்கையைப் படித்து விட்டு அமர்ந்தபோது திமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து கிருஷ்ணாவின் உப்புச்சப்பில்லாத பதிலைக் கண்டித்து குரல் கொடுத்தனர்.
அவர்களை அமருமாறு துணைத் தலைவர் ரஹ்மான் கான் கோரினார். ஆனால் கிருஷ்ணாவின் பதில் குறித்து கடுமையாக விமர்சித்த திமுக உறுப்பினர்கள், அவரின் உரை நகலைக் கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர். அதிமுகவினரும் கிருஷ்ணாவின் உரையை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

No comments:
Post a Comment